Breaking News

ஆஸ்திரேலியாவில் விபத்தில் சிக்கிய குப்பை லாரி ஓட்டுநர் இரண்டு நாட்களுக்கு பின்னர் உயிரிழப்பு : கடும் பனி மூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தகவல்

Garbage truck driver killed in crash in Australia two days after. Police say crash caused by heavy snow

மெல்போர்னின் Mt Wallace-Ballark சாலைப் பகுதியில் உள்ள Mount Wallace அதிகாலை நேரத்தில் நடந்த விபத்தில் கழிவுகளை ஏற்றிச் சென்ற ட்ரக் பனிமூட்டம் காரணமாக விபத்தில் சிக்கியது. இதில் 69 வயதான ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Garbage truck driver killed in crash in Australia two days after. Police say crash caused by heavy snow.இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதிகாலை நேரத்தில் அடர் பனியில் சென்ற நிலையில் மற்றொரு ட்ரக் ஓட்டுநர் இந்த ஓட்டுநருக்கு வழி சொன்னதாகவும் இரண்டு வாகனங்களும் விபத்தில் சிக்கியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மெல்போர்ன் ராயல் மருத்துவமனையில் இரண்டு ஓட்டுநர்களும் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு 56 வயதான ஓட்டுநர் எந்த காயங்களும் இன்றி தப்பினார்.

விபத்தில் உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விரிவான விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும், விபத்து தொடர்பான அறிக்கை விரைவில் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பணியிட பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை கூட்டணி அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.