Breaking News

ட்ரீம்வேர்ல்டுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி- குயின்ஸ்லாந்து முதல்வர் அதிருப்தி..!!

ட்ரீம்வேர்ல்டு கேளிக்கை பூங்கா நிறுவனம், அரசாங்கம் வழங்கிய பல மில்லியன் டாலர் நிதியை, பாதுகாப்பு பணிகளுக்கு செலவிட்டதுக்கு பதிலாக கோலா கரடிகளின் ஆராய்ச்சியில் முதலீடு செய்திருக்கலாம் என முதல்வர் அனாஸ்டாசியா தெரிவித்தார்.

Funding given to Dreamworld-Queensland CM unhappy

குயின்ஸ்லாந்தில் அமைந்துள்ள ட்ரீம்வேர்ல்டு கேளிக்கை பூங்கா நிறுவனம் அரசாங்கத்திடம் நிதியுதவி கோரி, கடந்த 2020-ம் ஆண்டு விண்ணப்பத்திருந்தது. அண்மையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்டிர்லிங் ஹின்ச்லிஃப் பூங்கா நிர்வாகத்துக்கு நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்.

Funding given to Dreamworld-Queensland CM unhappy,அரசாங்கத்திடம் இருந்து பெற்ற 2.7 மில்லியன் டாலர் பணத்தை, தீம் பார்க்கின் பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் பூங்கா நிர்வாகம் செலவிட்டது. ட்ரீம்வேர்ல்டு கேளிக்கை பூங்கா வளாகத்தில், கடந்த 2019-ம் ஆண்டு குயின்ஸ்லாந்தின் பூர்வீக விலங்குகளுக்கான மரபணு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. நிதியுதவி வழங்கப்பட்டது குறித்து முதல்வர் அனாஸ்டாசியாவுக்கு தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அவர், ட்ரீம்வேர்ல்டு கேளிக்கை பூங்கா அரசாங்கம் வழங்கிய பணத்தை பாதுகாப்பு பணிகளுக்கான செலவிடுவதை விட, குயின்ஸ்லாந்தின் பூர்வீக விலங்குகளான கோலா கரடிகள் மற்றும் கிளாமைடியாவின் ஆராய்ச்சி பணிகளுக்கு செலவிட்டு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தின் சுற்றுலாத்துறையிலும் கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதை ஈடுசெய்ய அரசாங்கம் வழங்கிய நிதியுதவியை ட்ரீம்வேர்ல்டு கேளிக்கை, கோலா கரடிகள் மற்றும் கிளாமைடியாவின் ஆராய்ச்சி பணிகளில் முதலீடு செய்திருக்கலாம் என்று முதல்வர் அனாஸ்டாசியா கூறினார்.

இதையடுத்து அறிக்கை வெளியிட்ட ட்ரீம்வேர்ல்டு, ஆய்வு மையத்தில் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் தற்போதைக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கேளிக்கை பூங்காவின் பணியாற்றும் ஊழியர்களின் தேவைக்காகவே அரசாங்கத்திடம் இருந்து நிதியுதவி வாங்கப்பட்டுள்ளது. நீண்டகால வேலைவாய்ப்பை ஆதரிக்கும் நோக்குடம் பணம் செலவிடப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளது.