Breaking News

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் ஆஸ்திரேலிய பிரதமர் பொய் சொன்னதாக கூறிய விவகாரம் : இரு முக்கிய சந்திப்புகளிலும் ஸ்காட் மோரிசன் கையாண்ட விதம்

அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் தன்னிடம் பொய் கூறி விட்டதாக பிரான்ஸ் அதிபர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பிய நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், குறிப்பிட்ட இந்த குற்றச்சாட்டுகளுக்கு தான் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் பிரான்ஸ் அதிபர் நடைபெற்றதாகவும் அதற்கு பிறகாகவே ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு ஆக்கசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் பங்கேற்ற ஜி-20 உச்சிமாநாடு மற்றும் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாடு ஆகிய இரண்டு சந்திப்புகளிலும் பல்வேறு நாட்டு தலைவர்கள் சந்தித்துப் பேசிக் கொண்டனர். இந்நிலையில் பிரான்ஸ் அதிபரின் குற்றச்சாட்டு தொடர்பான விவகாரங்கள் குறித்து உச்சி மாநாட்டில் இது தலைவர்களிடமும் கேள்வி எழுப்பப்பட்டது.

French President Emmanuel Macron's lie about Australian PM. How Scott Morrison handled both key meetings..ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தான் பிரான்ஸ் அதிபர்களை சந்தித்து நலம் விசாரித்ததாகவும் அதற்குப் பிறகு பேசுவதற்கான உரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும், தங்களது உறவில் எந்தவிதமான விரிசலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அதே நேரத்தில் ஒப்பந்தம் தொடர்பான விளக்கங்கள் தேவைப்பட்டால் அதனை தான் பிரான்ஸ் அதிபருடன் தெரிவிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உடை பட்டிருக்கும் பிரான்ஸ் – ஆஸ்திரேலியா இடையிலான உறவு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் அதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் பல்வேறு உறுதியான நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசு மேற்கொண்டு வருவதாகவும் அது இரு நாட்டு உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் இமானுவேல் மேக்ரன் தெரிவித்துள்ளார்.

French President Emmanuel Macron's lie about Australian PM. How Scott Morrison handled both key meetings...இந்த விவகாரத்தில் பரஸ்பரம் இரு நாட்டு தலைவர்களும் தெரிவித்த கருத்துக்கள் என்பது உடனடியாக ஒரே சந்திப்பில் தீர்வு காணக்கூடிய வகையில் ஆனது அல்ல என்றும், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் இருநாட்டு தலைவர்களும் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கள் இன்னும் பிரான்ஸ் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையிலேயே இருப்பதாகவும், அதனை தெளிவுபடுத்தும் வகையில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பிரான்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3mDa17V