குயின்லாந்தின் வடக்குப் பகுதியில் உரைய வைக்கும் அளவுக்கு குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது. இங்குள்ள ரேவன்ஷூ, இன்னிஸ்ஃபெயில் போன்ற முக்கிய நகரப் பகுதிகள் குளிரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது பனிப்பொழிவும் ஏற்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் பனி காணப்பட்டதை அடுத்து, விரைவில் வெப்பநிலை உருவாகும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரலாறு காணாத இந்த குளிரால் குயின்ஸ்லாந்து விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மஞ்சள் பூசினிக்காய் சாகுபடி பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் குயின்ஸ்லாந்தின் தெற்குப் பகுதியில் விவசாயத்துறைக்கு இந்த குளிர்ந்த வானிலை பேருதவியாக இருப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய மற்றும் கனடா நாட்டில் விளையும் பழங்களை ஆஸ்திரேலியாவில் விளைவித்து வணிகம் செய்யும் வியாபாரிகளுக்கு, இந்த பருவம் நல்ல விளைச்சலை அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் குயின்ஸ்லாந்தில் நிலவி வரும் குளிர்ந்த வானிலை விரைவில் நீங்கும். பிரிஸ்பேனில் நிலவும் வெப்பநிலை விரைவில் குயின்ஸ்லாந்தின் வடக்குப் பகுதிக்கு வரும். முதல்கட்டமாக குறிப்பிட்ட பகுதிகளில் பனிமூட்டம் ஏற்படுவது குறையும். பருவநிலை மாறும் வரை கடற்கரையில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும். வெப்பநிலை தொடரும் பட்சத்தில் மீனவர்கள் தொழில் ஈடுபடலாம் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.