Breaking News

இலண்டனில் இருந்து நான்கரை லட்சம் ஃபைசர் தடுப்பூசிகள் : இரண்டு விமானங்களில் ஆஸ்திரேலியாவின் சிட்னி வந்தடைந்தது

ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான மாகாணங்களில் முடக்க நிலை தொடர்ந்து அமலில் உள்ளது. அங்கு தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் பிரதமர் ஸ்காட் மோரிசன் லண்டனில் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 4 லட்சத்து 57 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகள் விமானம் மூலமாக சிட்னி வந்தடைந்தது. முதல் விமானத்தில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 970 தடுப்பூசிகள் வந்த நிலையில், சில மணி நேரங்களில் வந்த மற்றொரு விமானத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன.

Four and a half million Pfizer vaccine from London. Arrived in Sydney, Australia on two flights.சிட்னி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலிய தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையமான TGA மூலமாக உரிய முறையில் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 ஆயிரம் கூடுதல் ஃபைசர் தடுப்பூசி டோஸ்களை சிங்கப்பூரில் இருந்து வாங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று TGA கூறியுள்ளது.

தேசிய அளவில் கொள்முதல் செய்யப்படும் ஃபைசர் தடுப்பூசி இரண்டு மடங்காக அதிகரிப்படும் என்று கடந்த மாதம் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்திருந்த நிலையில், தற்போது பல்வேறு நாடுகளில் இருந்தும் தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக தடுப்பூசிகள் வாங்கப்பட்டு நிலையில் ஆஸ்திரேலியாவில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கும் என்று துணை தலைமை சுகாதார அதிகாரி Sonya Bennett கூறியுள்ளார்.

அதிக அளவிலான தடுப்பூசிகளை கொள்முதல் செய்யவில்லை என்றும் அதேநேரம் தடுப்பூசி போடும் பணிகளை விரைவு படுத்த வில்லை என்றும் அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டதாகவும் தற்போது மாகாணங்களுக்கு கூடுதலாக தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுவதாகவும் துணை தலைமை சுகாதார அதிகாரி Sonya Bennett தெரிவித்துள்ளார்.

Four and a half million Pfizer vaccine from London. Arrived in Sydney, Australia on two flights..சிட்னி,நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட மாகாணங்களுக்கு எந்தவிதமான தடையும் இன்றி தடுப்பூசிகள் அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இனி வரும் மாதங்களில் அனைத்து மாகாணங்களுக்கும் கூடுதல் அளவு தடுப்பூசிகள் தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளதாகவும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி கிடைப்பதை மாகாண அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் Sonya Bennett தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3h2TuH6