Breaking News

மீண்டும் அதிபராகி வெள்ளை மாளிகைக்குத் திரும்பினால் கடந்தாண்டு கேப்பிட்டோல் தாக்குதலில் பங்கேற்ற ஆதரவாளர்களை மன்னித்துவிட வாய்ப்புள்ளதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Former US President Donald Trump has said he will pardon supporters who took part in last year's Capitol attack if the president returns to the White House.

அமெரிக்காவில் கடந்த 2020, நவம்பர் 15-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த 2020, ஜனவரி 20-ம் தேதி அவர் அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.

Former US President Donald Trump has said he will pardon supporters who took part in last year's Capitol attack if the president returns to the White House..முன்னதாக கடந்த ஜனவரி 6, 2020-ம் தேதி அன்று அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேப்பிடோல் கட்டிடத்தில் டிரம்பில் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். நாடாளுமன்ற அவைக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகத்தையே உலுக்கியது. தேர்தல் முடிவு தொடர்பாக தவறான தகவல்களை வெளியிட்டு, ஆதரவாளர்களை டிரம்பர் பகடைக் காயாக பயன்படுத்துவதாக பலரும் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முன்னாள் அதிபர் டிரம்பர் டெக்சாஸ் மாகாணம், கான்ரேவில் நடந்த பேரணி ஒன்றில் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானால் கேப்பிடோல் கட்டிடத்தில் வன்முறையில் ஈடுபட்ட ஆதரவாளர்களை சிறப்பாக கவனிப்பேன். என் மீதும், நமது நாட்டின் மீதும் மிகப்பெரிய அன்பை அவர்கள் வைத்துள்ளனர். அதை என்னால் இந்த சம்பவத்தின் போது புரிந்துகொள்ள முடிந்தது என்று அவர் கூறினார்.

Link Source: https://ab.co/3rdZthE