Breaking News

சிட்னி ஸ்வானின் முன்னாள், உரிமையாளரும், சர்ச்சைக்குரிய வர்த்தகருமான Geoffrey Edelsten காலமானார் : அவருக்கு வயது 78

Former Sydney Swann owner and controversial businessman Geoffrey Edelsten has died at the age of 78.

மெல்போர்னில் St Kilda சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த அவர் வெள்ளியன்று பிற்பகல் உயிரிழந்ததாகவும், மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்றும் உடற்கூறாய்வு அறிக்கைக்கு பின்னர் மேலும் விவரங்கள் வெளியாகும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Carlton -ல் பிறந்த எடெல்ஸ்டன் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் 1966ம் ஆண்டு மருத்துவம் பயின்றார். ராயல் மெல்போர்ன் மருத்துவமனையில் பணிபுரிந்தவர் பின்னர் கிழக்கு சிட்னியின் ஊரகப் பகுதிகளில் பயிற்சி மேற்கொண்டார். பின்னர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 24 மணி நேர மருத்துவமனை ஒன்றையும் அவர் திறந்தார். 1988ஆம் ஆண்டு அதிக அளவு மருத்துவக் கட்டணம் வசூலித்ததாக நியூ சவுத் வேல்ஸ் மருத்துவ பதிவிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் அவரது நோயாளி ஒருவரை தாக்கியதாக ஜியோஃப்ரே சிறையிலும் அடைக்கப்பட்டார்.

Former Sydney Swann owner and controversial businessman Geoffrey Edelsten has died at the age of 78பின்னர் 1985-ம் ஆண்டு குழு கடுமையான நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்து தொடர்ந்து செயல்பட முடியாமல் போன போது அவர்களுக்கு எடெல்ஸ்டன் உதவி செய்தார். இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர்கள் இருந்த ஸ்வான் அணியை அவர் சொந்தமாக்கிக் கொண்டார். கால்பந்து ஆட்டத்தை மிகவும் நேசித்த மருத்துவரிடம் எடெல்ஸ்டன், Swan பணியின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றினார். ஆனால் அதே நேரத்தில் பின்னாளில் வங்கி மோசடி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி சர்ச்சைக்கு ஆளானார் டாக்டர் ஜியோஃப்ரே எடெல்ஸ்டன். 2014 ஆம் ஆண்டு தவறான வர்த்தக ஒப்பந்தங்களால், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க வங்கிகளில் நினைத்தபோதெல்லாம் வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் திணறினார். ஆனால் அவரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்தன. அவரது வாழ்க்கைமுறை பலரது கவனத்தை ஈர்த்தது. மேன்சன், ஹெலிகாப்டர், சொகுசு கார்கள் என பல்வேறு விஷயங்களை அனுபவித்து வந்த டாக்டர் இளம்பெண் ஒருவருடன் உறவில் இருந்தது ஊடக வெளிச்சத்தில் அவரை தொடர்ந்து தக்க வைத்தது.

தனது முதல் மனைவியை 1988ஆம் ஆண்டு விவாகரத்து செய்த டாக்டர் பின்னர் உடற்பயிற்சி பயிற்றுனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் நான்கு ஆண்டு வாழ்க்கைக்கு பின்னர் அவரும் பிரிந்து சென்றார். இந்நிலையில்தான் அமெரிக்காவைச் சேர்ந்த மாடலிங் செய்து வரும் பெண் ஒருவருடன் ஜியோஃப்ரே எடெல்ஸ்டன் உறவில் இருந்தார்.

Link Source: https://ab.co/2TRKlZa