நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தின் முன்னாள் துணை ப்ரீமியர் John Barilaro குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், இத்தாலிய பராம்பரியத்தை கேலி செய்யும் வகையிலும் வீடியோ வெளியிட்டதாக பிரபல நகைச்சுவை கலைஞரும், அரசியல் விமர்சகருமான Jordan Shanks மீது புகார் எழுந்தது.
இந்நிலையில் அவர் வெளியிட்ட வீடியோக்களை புகாருக்கு பின்னரும் யூடியுப் நிறுவனம் அதை நீக்கமால் வைத்திப்பதாகவும், இது தொடர்பாக கூகுள் நிறுவனம் முறையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் John Barilaro நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
2020ம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட இரண்டு வீடியோக்களில் John Barilaro பல ஆண்டுகளாக ஊழல் நடவடிக்கைகளுக்கு காரணமாக இருந்ததாகவும், மாபிய கும்பல்களின் இனவாத நடவடிக்கையை ஆதரித்தார் என்றும் Jordan Shanks யூடியுப் பக்கத்தில் நேரலை வீடியோக்கள் வெளியிடப்பட்டன. Jordan Shanks எதிராக John Barilaro தொடர்ந்த அவதூறு வழக்கை நீதிமன்றம் கடந்த ஆண்டே முடித்து வைத்தது. ஆனாலும், குறிப்பிட்ட வீடியோக்களை யூடியுப் பக்கத்தில் இருந்து நீக்காமல் வைத்திருந்தது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை என்றும், கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் John Barilaro கூறியுள்ளார்.
இனபாகுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு கொச்சையான விமர்சனங்களை Jordan Shanks மேற்கொண்டு இருந்த நிலையில், அதன் மீதான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உரிய நாள் இனபாகுபாடுகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் என்று வழக்கறிஞர் Sue Chrysanthou தெரிவித்துள்ளார்.
Jordan Shanks -க்கு விதிக்கப்பட்டிருந்த எல்லைகளை அவர் மீற வில்லை என்று யூடியுப்-ன் விளக்கத்திற்கு வழக்கறிஞர் Sue Chrysanthou கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ளார். சமுக வழிகாட்டுதல்களை மீறவில்லை என்பற்கான அளவு கோல்களாக கூகுள் வைத்திருப்பவை என்னென்ன என்றும் Sue Chrysanthou கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த ஆண்டுகளில் John Barilaro குறித்த வீடியோ ஏற்படுத்திய தாக்கம் மற்றும் அவர் அரசியலில் இருந்து விலகியதற்கான நிலையை உருவாக்கியது குறித்து அவரே நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிப்பார் என்றும் Sue Chrysanthou கூறியுள்ளார்.
சில ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அந்த வீடியோக்களை தான் மீண்டும் பார்க்க நேரிட்டதாகவும், அதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் வழக்கறிஞர் Sue Chrysanthou குறிப்பிட்டுள்ளார். இது குறித்து உரிய விளக்கத்தை நீதிமன்றத்தில் கூகுள் நிறுவனம் அளிக்க வேண்டும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3Jzgx8z