Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் முன்னாள் முதல்வர் கிளாடிஸ் பெர்ரிஜிகிலான், பிரதமர் ஸ்காட் மோரீசனை தரக்குறைவாக விமர்சிக்கவில்லை என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

Former Chief Minister of the State of New South Wales Gladys Berejiklian has categorically denied that she criticized Prime Minister Scott Morrison for being substandard.

நெட்வொர்க் டென் தொலைக்காட்சியின் அரசியல் பிரிவு ஆசிரியர் பீட்டர் வேன் ஆன்செலன், பிரதமர் ஸ்காட் மோரீசனுடன் உடன் நடந்த உரையாடல் குறித்து பேசினார். அப்போது லிபரல் கட்சியைச் சேர்ந்த அமைச்சருக்கும், கிளாடிஸ் பெர்ரிஜிகிலானுக்கு இடையில் நடந்த குறுந்தகவல் பரிமாற்றம் குறித்து பிரதமருக்கு தெரியவந்தது. அதில் பிரதமரை மிகவும் கொடுமைக்காரன் எனவும், அவரை நம்பக் கூடாது என பெர்ரிஜிகிலான் குறிப்பிட்டு இருந்ததார் என்று தெரிவித்தார்.

Former Chief Minister of the State of New South Wales Gladys Berejiklian has categorically denied that she criticized Prime Minister Scott Morrison for being substandard..இது நாடு முழுவதும் பதற்றத்தை உண்டாக்கியது. ஆனால் இதற்கு பிரதமர் ஸ்காட் மோரீசன் மறுப்பு தெரிவித்தார். அதேபோல முன்னாள் முதல்வர் கிளாடிஸ் பெர்ரிஜிகிலான், இப்படி தான் பேசியது போல நினைவில்லை என்று கூறினார். அதே சமயத்தில் கொரோனா பரவல் சமயத்தில் ஸ்காட் மோரீசன் ஆஸ்திரேலியாவை சரியாக வழி நடத்தி வருகிறார். இந்த நாட்டுக்கு எது சிறந்ததோ அதை செய்ய அவர் தவறியது இல்லை என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக ஃபெடரல் சீட்டுக்கு தகுந்த வேட்பாளாராக திருமதி. பெர்ரிஜிகிலான் முன் மொழியப்பட்டார். பிரதமர் ஸ்காட் மோரீசன் உட்பட பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ஆனால் அவர் அரசியலில் இருந்து விலகும் முடிவை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://bit.ly/3AQBSXw