Breaking News

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் குறித்து ரஷ்ய அரசு தனது மக்களிடம் தவறான தகவல்களை வழங்கி வருவதாகவும், உடனடியாக இந்த போரை நிறுத்திட அதிபர் விளாடிமிர் புதின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகரும் கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Former California Governor Arnold Schwarzenegger has called on President Vladimir Putin to take immediate action to end Russia's ongoing war on Ukraine.

இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ரஷ்ய மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன், அதனால் தான் ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன் என்று தன்னுடைய பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். வீடியோவில் பேசும் அவர், உக்ரைன் போர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து ரஷ்ய மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியாது. உக்ரைன் இந்த போரை தொடங்கவில்லை.

ரஷ்யாவின் ஒவ்வொரு குண்டுகள் பாயும் போதும், உங்களுடைய சொந்த சகோதர மக்களை நீங்கள் இழந்து வருகின்றீர்கள். ஒரு முட்டாள்தனமான போரால் உங்களுடைய எதிர்காலம், உங்களது நம்பிக்கை, உங்களை வாழ்க்கை பாழாகி வருகிறது என்று மிகவும் உணர்ச்சி வசத்துடன் அர்னால்டு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Link Source: https://ab.co/3ubKaq1