Breaking News

பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் ஆஸ்திரேலியா போதிய முனைப்பு காட்டவில்லை என்று முன்னாள் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.

Former British Prime Minister Theresa May has said that Australia has not shown enough initiative in tackling climate change.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் லிபரல் கட்சியினர் விடுத்த அழைப்பை ஏற்று, தெரசா மே ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளார். அங்கு மெல்பேர்னில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், நாட்டின் பொருளாதாரத்தையும் பருவநிலை மாற்றத்தையும் ஒருசேர நிர்வகிக்க அரசு முயற்சித்து வருகிறது. அப்படியானால் அரசுக்கு அதிலுள்ள ஆபத்து புரியவில்லை என்று அர்த்தம்.

எதிர்காலத்தை கருதி கண்டுப்பிடிக்கப்படும் புதிய தொழில்நுட்பங்கள் பிரமிப்பை தருகின்றன. ஆனால் அது சுற்றுச்சூழலுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக அமைந்துவிடுகிறது. காலநிலை மாற்றத்தின் இந்த நிலையை ஆஸ்திரேலியா இதுவரை உணராதது போலவே தெரிகிறது. வருங்காலத்தில் அதை மாற்ற முனைப்பு காட்டும் என்று நம்புவதாக தெரசா மே நிகழ்ச்சியில் பேசினார்.

Link Source: https://bit.ly/3oLrqf8