Breaking News

ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரின் தைவான் பயணம் : தவறான சமிக்ஞைகளை Tony Abbott ஏற்படுத்துவதாக சீன வெளியுறவுத்துறை கண்டனம்

Former Australian PM visits Taiwan. Chinese Foreign Ministry condemns Tony Abbott for sending false signals

ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் Tony Abbott தைவானில் நடைபெற்ற சர்வேதேச கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று இருந்தார். அங்கு உரையாற்றி ய அவர் தைவானில் சீனா ராணுவம் மேற்கொண்டு அச்சுத்தல்களை கண்டித்து பேசினார். இந்நிலையில், Tony Abbott தைவான் பயணம் ஆஸ்திரேலிய அரசிலேயே சலசலப்புகளை எழுப்பியுள்ள நிலையில், இது போன்ற சூழலில் Tony Abbottன் பயணம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என மூத்த அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், Tony Abbottன் தைவான் பயணம் தவறான சமிக்ஞைகளை காட்டுவதாகவும், தனிநபர் அரசியல்வாதியாக அபத்தமான கருத்துகளை அவர் வெளிப்படுத்தி இருப்பதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் Zhao Lijian கூறியுள்ளார்.

One – China கோட்பாட்டை Tony Abbott கடுமையாக மீறி உள்ளாதாகவும் தற்போதைய நிலையில் இது சரியா தவறா என்ற தீவிரமான குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் Zhao Lijian கண்டனம் தெரிவித்துள்ளார்.

அடிப்படை காரணங்களில் வேறுபாடு, தத்துவார்த்த மோதல்களை கருத்தில் கொண்டு பனிப்போர் நிலவுவதாக ஆஸ்திரேலியர்கள் எண்ணுவது தவறானது என்றும், சீனா குறிப்பிட்ட வளர்ச்சி இலக்கை நோக்கி பயணிக்கிறது என்றும் இதில் பொறுப்பற்ற தன்மையில் கருத்து தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Former Australian PM visits Taiwan. Chinese Foreign Ministry condemns Tony Abbott for sending false signals.தைவானின் முக்கிய பகுதிகளில் சீன ராணுவத்தில் அத்துமீறி பறந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அடுத்த நாள் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் Tony Abbott தைவான் பயணம் மேற்கொண்டது கடுமையான விமர்சனங்ள் எழுந்துள்ளன. இதுபோன்ற சூழலில் Tony Abbott பயணம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என ஸ்காட் மோரிசன் அரசாங்கம் தெரிவித்தது. கொரொனா வைரஸ் பிறப்பிடம் தொடர்பாக சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்த நிலையில், பெய்ஜிங்கில் இறக்குமதி செய்யப்படும் ஆஸ்திரேலிய பொருட்களான பார்லி, நிலக்கரி, ஒயின் உள்ளிட்ட பொருட்களுக்கு பெய்ஜிங்கில் அதிகாரப்பூர்வமாகவும், முறைகேடாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்திய எல்லையில் சீன துருப்புக்கள் அத்துமீறி நுழைந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கும் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தியா சீனா எல்லை விவகாரத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அதனை தணிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவும் ஆனால் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மூலமாக பதற்றம் நீடிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் Zhao Lijian குறிப்பிட்டுள்ளார்.

Link Source: https://ab.co/3FE13P4