Breaking News

மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டதை அடுத்து, அடுத்தாண்டு முதல் அனைத்து ஆஸ்திரேலியப் பள்ளிப் பாடத்திட்டங்களில் பாலியல் கல்வி இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Following the unanimous agreement of Union and state ministers, sex education will be included in all Australian school curriculum from next year.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் சிட்னி நகர் பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் தனியார் பள்ளி மாணவி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டு இருந்தார். அதில், உங்களுக்கு தெரிந்த அல்லது உங்கள் குடும்பத்தில் யாராவது பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று தனது ஃபோலோயர்ஸுகளை நோக்கி கேள்வி எழுப்பி இருந்தார்.

Following the unanimous agreement of Union and state ministers, sex education will be included in all Australian school curriculum from next year..அதை பதிவிட்ட வெறும் 24 மணிநேரங்களில் ‘ஆம்’ என்று கூறி 200 கமெண்டுகள் வந்தடைந்தன. அதையடுத்து ஆன்லைன் வழியாக பள்ளிகளில் பாலியல் கல்வியை ஊக்குவிக்கக் கோரி ஆஸ்திரேலியா கல்வித்துறைக்கு மனு அனுப்பினார். அதில் மொத்தம் 44 ஆயிரத்திக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு இருந்தனர். மேலும் மாணவியின் பதிவிக்கு கீழ் 6,600 பேர் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் குற்றங்கள் குறித்து தெரிவித்திருந்தனர்.

இது ஆஸ்திரேலியாவின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தெரிந்துகொண்ட கல்வி அமைச்சர் தான்யா பிலிபர்செக் மாணவிக்கு தனது வாழ்த்துக்களை கூறி ட்விட்டரில் பதிவிட்டார். மாணவியின் மனு தொடர்பாக பாராளுமன்றத்திலும் விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து 2023-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவின் அனைத்து பாடத்திடங்களிலும் பாலியல் கல்வி இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் மத்திய அமைச்சர்கள் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். தனது கோரிக்கை ஏற்கப்பட்டது குறித்து மாணவியும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3rZ8BY8