Breaking News

வரும் மே மாதம் 21-ம் தேதி ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, ஒரு வாக்காளராக மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவில் குடியுரிமை கொண்டவர்கள் ஒவ்வொருவரும், தங்களுக்கு வாக்களிக்கும் உரிமையுள்ளதா என்பதை அந்நாட்டின் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம். அதற்கு கடவுச் சீட்டு எண், ஓட்டுநர் உரிமம் போன்ற அரசு ஆவணங்களை சமர்பிப்பது அவசியம்.

Following the general election in Australia on May 21, let's take a look at the key features that people as a voter need to know..முடிந்தவரை வாக்குச்சாவடிக்கு சீக்கரம் சென்றுவிடுவது நல்லது. தேர்தல் ஆணையம் வெளியிடும் தரவுகளை தெரிந்துகொண்டு, உங்களுடைய வாக்கை எந்த வாக்குச்சாவடியில் பதிவு செய்யலாம் என்கிற விபரத்தை பெற்றிடுங்கள். ஆஸ்திரேலியராவில் மாநிலங்களுக்கு இடையே வசிக்கக்கூடியவர்களுக்கு தனியாக வாக்குச்சாவடி உள்ளது. அதுதொடர்பான தகவல்களையும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பெறலாம்.

வெளிநாடுகளில் வசிப்பவர்களும், பொதுதேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அதற்குரிய வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை வழங்கி, வாக்களிக்கும் உரிமையை பெறலாம். தேர்தல் நடைபெறும் நாளில் நீங்கள் பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய சூழ்நிலை இருந்தால், தொலைப்பேசி வாயிலாக அழைத்து குரல் வழியில் உங்களுடைய வாக்கை பதிவு செய்யலாம்.

Following the general election in Australia on May 21, let's take a look at the key features that people as a voter need to know...வாக்களிக்கும் போது, இரண்டு வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டு இருக்கும். ஒன்று மேல் சபைக்கு மற்றொன்று கீழ் சபைக்கு. அதேபோன்று வாக்களிக்க வருபவர்களுக்கு இரண்டு வாக்குச் சீட்டுகள் வழங்கப்படும். அதன்படி நீங்கள் வாக்களிக்க விரும்புவோரின் எண்ணுக்கு எதிரே குறியீடுகளை வழங்கி நீங்கள் உங்கள் வாக்கை பதிவு செய்திட வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கணிசமாக உயரம் கண்டது. அதனால் நடப்பாண்டிலும் அதேநிலை நீடிக்கும் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.