சமீபத்தில் ராணி எலிசெபத் தன்னுடைய மகனான இளவரசர் சார்லஸை சந்தித்தார். அதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 10-ம் தேதி இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டது. அவர் உடனடி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பக்கிகம் அரண்மனை செய்தி தொடர்புத் துறை ராணி இரண்டாம் எலிசெபத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. அதை தொடர்ந்து பக்கிங்கம் அரண்மனை முழுவதும் அரசின் கொரோனா வழிகாட்டு முறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல ராணியை மற்றவர்கள் சந்திப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய பணிகளை ராணி எலிசெபத் வீடியோ காலிங்கில் செய்து வருவதாகவும், பொது நிகழ்ச்சிகளிலும் அவர் அவ்வாறே பங்கேற்பார் என்றும் பக்கிங்கம் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது.
Link Source: https://ab.co/3s81xIE