Breaking News

காதலியை கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்த வழக்கில் டேனியல் ஷீல்ட்ஸ் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறைக்கப்பட்டு நீதிமன்றம் தண்டனை விபரங்களை வெளியிட்டுள்ளது.

Following the confession of Daniel Shields in the case of attempted murder of his girlfriend with a knife, the charges against him have been reduced and the court has released the details of the sentence.

கியூன்ஸ்லாந்து மாகாணத்திலுள்ள கிரேஸ்மியர் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் ஜான் ஷீல்ட்ஸ் (50). இவர் காதலித்த வந்த பெண்ணுடன் ரேமண்டு ஹார்விஸ் என்பவர் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் டேனியல் ஷீல்ட்ஸ் காதலியை பிரிந்தார்.

இதனால் டேனியல் மற்றும் ரேமண்டுக்கு இடையில் பிரச்னை உருவானது. அப்போது ஏற்பட்ட சண்டையில் ரேமண்டை டேனியல் கத்தியால் தாக்கிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து டேனியல் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு டேனியலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் பிணையில் வெளியே வந்த டேனியல், ராக்ஹேம்டனில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்தார். முந்தைய நீதிமன்ற வீசாரணையை நீதிபதி தவறாக வழிநடத்திச் சென்றதாகவும், ரேமண்டு ஹார்விஸ் டேனியலையும் கொடூரமாக தாக்கினார் என்கிற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் தற்போது இவ்வழக்கில் தீர்ப்பு கூறியது. காதல் விவகாரத்தில் ரேமண்டை டேனியல் கொடூரமாக தாக்கினார் என்பது உறுதியாகியுள்ளது. இதனால வருக்கு 3 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பதாகவும், இதை குற்றவாளி டேனியல் ஏக காலத்துக்கு அனுபவிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.