Breaking News

பீர் பாட்டீல்களுக்கு இடையே கடத்தப்பட்ட ஐந்தரை கோடி போதை மாத்திரைகள் கண்டறியப்பட்டுள்ளது. இது ஆசியாவிலேயே ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கையாகும்.

Five and a half crore drugs were found smuggled between beer bottles. It is the largest simultaneous drug seizure operation in Asia.

ஆசிய வரலாற்றில் முதன்முறையாக தாய்லாந்து நாட்டின் லாவோஸ் நகரில் கண்டைனர் லாரியில் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஐந்தரை கோடி போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தற்போது புழங்கி வரும் நிலையில் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள லாவோஸ் நகரில் அந்நாட்டு போலீசார் ஆசிய அளவில் மிகப்பெரிய போதை மருந்துகளை கைப்பற்றியுள்ளனர்.

Five and a half crore drugs were found smuggled between beer bottles. It is the largest simultaneous drug seizure operation in Asia..மெத்தாம்பிடாமைன் என்கிற போதை மாத்திரை மிகவும் பிரபலமானது. லாவோஸ் மியான்மார், தாய்லாந்து ஆகிய எல்லைகளில் இந்த போதைப்பொருளை கடத்த மிகப்பெரிய கும்பல் செயல்பட்டு வருகிறது. இந்த கும்பலை கைது செய்ய தாய்லாந்து போலீசார் பல காலமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். லாவோஸ் நகரில் போலீசார் சோதனையில் பீர் பாட்டில்களை எடுத்து சென்ற கண்டெய்னர் லாரியில் பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஐந்தரை கோடி மெத் போதை மாத்திரைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தாய்லாந்திலிருந்து ஜப்பான் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு இடைத்தரகர்களும் உள்ளனர். போதை மாத்திரைகளை பல்வேறு நாட்டு எல்லைகளை தாண்டி கொண்டு சேர்ப்பது, மூன்றாம் நபரிடம் விற்பது உள்ளிட்ட செயல்களுக்கு பாங்காக் நகரை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருகிறது.

மலேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்த மாத்திரைகள் கடத்தப்படுகின்றன. ஆசிய வரலாற்றில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இத்தனை கோடி போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Five and a half crore drugs were found smuggled between beer bottles. It is the largest simultaneous drug seizure operation in Asiaஉயர்ரக பார்கள், ரெஸ்டாரன்ட் கள், சுற்றுலாத்தலங்கள் ஆகிய இடங்களில் இந்த மாத்திரைகளை விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. குறிப்பாக செல்வந்தர்களின் வாரிசுகள் பலர் இவற்றை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மாத்திரைகளுடன் 1500 கிலோ எடை கொண்ட கிரிஸ்டல் வடிவிலான மெத்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தகவலை ஐநாபோதைப்பொருள் தடுப்பு பிரிவு தூதர் ஜெரமி டக்லஸ் உறுதி செய்துள்ளார்.

கடந்த ஆண்டு லாவோஸ் நகரில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களைக் காட்டிலும் தற்போது மூன்று மடங்கு அதிக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த போதை மாத்திரைகளை சுமந்து சென்ற லாரி லாவோ பிருவரி என்கிற பீர் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமானது. போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதற்கும் தங்களது பீர் தயாரிப்பு நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக மியான்மர் நாட்டின் ஷான் பகுதி போதைப்பொருள் கடத்தலின் இதயப் பகுதியாக திகழ்ந்து வந்தது. இங்கிருந்து ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படும்.

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதிமுதல் மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்று வருவதால் இந்த போதை பொருட்கள் தாய்லாந்துக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Link Source: https://ab.co/3bmSOZW