Breaking News

பைசர் நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியாவின் மருந்து பொருள் நிர்வாகத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் சராசரியாக சுமார் 60% பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை எட்ட, ஸ்காட் மோரிசன் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கோவிட் வைரஸுக்கு எதிரான தொடர்போராட்டத்தின் நீட்சியாக, பைசர் நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியாவின் மருந்து பொருள் நிர்வாகத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஆஸ்திரேலிய மருத்துவ கட்டுப்பாட்டு குழு அனுமதி வழங்கும் பட்சத்தில் பூஸ்டர் தடுப்பூசி வினியோகம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fischer's booster vaccine has been approved by the Australian Department of Pharmaceuticals..18 வயதை கடந்தவர்களுக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 6 மாதங்களுக்கு பிறகு இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள தகுதியுள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளது. வேறு நிறுவனத்தை சேர்ந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களும், இந்த பூஸ்டரை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மருந்து பொருள் நிர்வாகத்துறை பூஸ்டர் டோஸ்களுக்கு அனுமதி வழங்கியிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் தடுப்பூசி தொழில் நுட்பக்குழு இன்னும் இந்த விவகாரத்தில் தன் முடிவை தெரிவிக்கவில்லை.

தொழில் நுட்பக்குழுவின் பரிந்துரை கிடைத்தவுடன் பூஸ்டர் டோஸ்ட்கள் செலுத்தும் பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fischer's booster vaccine has been approved by the Australian Department of Pharmaceuticals,2022 ஜனவரி மாதம் கணக்கீட்டின் படி ஏற்கனவே தடுப்பூசி செலுத்திகொண்ட 1.6 மில்லியன் பேர் 6 மாதகாலத்தை நிறைவு செய்வதால், அவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி வாய்ந்தவர்களாக கருதப்படுவர். அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் போன்ற நாடுகளில் ஏற்கனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பூஸ்டர் டோஸ்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ பொருள் நிர்வாகத்துறை தலைவர் , John Skerritt இது மிக அவசியமானது என்றும், குறிப்பாக முன்கள பணியாளர்களுக்கு தேவையான ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

Link Source: https://ab.co/3jGk2iy