ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவில் இன்னும் கொரோனா பரவல் தொடர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது.
ஆனால் பொதுமக்களுக்கு பல்வேறு அத்தியாவச தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. குறிப்பாக தொழில் முனைவோர், வணிகர்கள் உள்ளிட்டோர் கொரோனா கட்டுப்பாடுகளால் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து மாநில முதல்வர் மார்க் மெக்கவுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து விரைவில் அனுமதிக்கப்படும். இன்னும் 2 வாரங்களில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும். மார்ச் 3-ம் தேதிக்குள் மாநிலத்தில் பூஸ்டர் டோஸ் போட்டவர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்தை கடந்து பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
Link Source: https://ab.co/3I6K60O