Breaking News

விக்டோரியாவில் தொற்றுநோய் மசோதாவை எதிர்த்து கடும் போராட்டம்;- மறுபுறம் 980 பேர் பாதிப்பு.

மாநிலத்தின் தடுப்பூசி விதிகள் மற்றும் தொற்றுநோய்ச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால், விக்டோரியாவில் டஜன் கணக்கான வணிகங்கள் மூடப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை பல்லாரடில் போராட்டத்திற்காக சுமார் 1,000 பேர் கூடினர், ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை, என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Fierce struggle against the pandemic bill in Victoria. 980 people affected on the other hand..சனிக்கிழமையன்று, மெல்போர்னில் 8,000 முதல் 10,000 பேர் கூடி புதிய தொற்றுநோய்ச் சட்டத்தை இயற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கடந்த வாரம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய சட்டம், விக்டோரியாவின் மாகாண தலைவருக்கும், சுகாதார அமைச்சருக்கும், ஒரு தொற்றுநோயை பொருத்து கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் அதிகாரத்தை வழங்குகிறது.

மாகாணத்தின் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல்லாரட் நகரின் மேயர் டேனியல் மோலோனி கூறுகையில், நகரம் அதன் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்திருக்கிறது மேலும் பல போராட்டங்களை கண்டுள்ளது, “இந்நிலையில் இந்த சட்டத்தின்இயல்பு பல வணிகங்களைத் திறப்பதா அல்லது மூடுவதா என்ற கவலையைக் கொடுத்துள்ளது” என்றார்.

லாக்டவுன், தடுப்பூசி மற்றும் தொற்றுநோய் மசோதாவை எதிர்த்து பல மாதங்களாக இப்பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்திய வாரங்களில் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்ற இப்போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றன. யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில், பேரணிகளில் ஆங்காங்கே வன்முறைகள் வெடித்தன.

Fierce struggle against the pandemic bill in Victoria. 980 people affected on the other hand.முதலில், நூற்றுக்கணக்கான கூட்டத்தினர், பல்லாரட் வெளியே கூடி, கூட்டத்தினரின் பேச்சுகளை, கருத்துக்களை கேட்டனர். பின்னர் அவர்கள் அணிவகுப்பாக பலரட் ஸ்கேட் பூங்காவிற்குச் சென்றனர், அங்கு அதிகமான கூட்டமும், உரைகளும், உரத்த இசையுடன் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. கூட்டத்தில் ஏராளமானோர் யுரேகா கொடிகள், பதாகைகள், தலைகீழான ஆஸ்திரேலிய கொடிகள், மற்றும் பிற நாடுகளின் கொடிகளை ஏந்திச் சென்றனர். ஒரு புறம் தொற்றுநோய் மசோதாவை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற மறுபுறம் விக்டோரியாவில் புதிதாக 980 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஐந்து நாட்களில் அம்மாநிலத்தின் தினசரி கொரோனா எண்ணிக்கை 1,000 க்கும் குறைவாக பதிவாகி இருப்பது இதுவே முதல் முறை.

Link Source: https://ab.co/3owzvop