Breaking News

நியூ மெக்சிகோவில் ‘ரஸ்ட்’ சினிமா படப்பிடிப்பில் பெண் ஒளிப்பதிவாளர் உயிரிழந்த சம்பவம் : உண்மையில் நடந்தது என்ன என சட்டப்பூர்வ விசாரணைக்கு உத்தரவு

Female cinematographer killed in 'Rust' movie shooting in New Mexico. Legal inquiry ordered into what actually happened

நியூ மெக்சிகோவின் சாண்டா ஃபே பகுதியில் பிரபல ஹாலிவுட் நடிகரான அலெக் பால்ட்வின் நடிப்பு மற்றும் இணை தயாரிப்பில் ரஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்கள் படமாக்கப்படும் சாண்டா ஃபே பகுதியில் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஒன்று எதிர்பாராதவிதமாக வெடித்த சம்பவத்தில் பெண் ஒளிப்பதிவாளர் Halyna Hutchins உயிரிழந்தார். படத்தின் இயக்குநர் Joyal Souza படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Female cinematographer killed in 'Rust' movie shooting in New Mexico. Legal inquiry ordered into what actually happened.இந்நிலையில் படப்பிடிப்பில் நடைபெற்ற பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக சட்டப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது மேலும் இந்த விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள வாரண்ட் அடிப்படையில் குறிப்பிட்ட காட்சிகளில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் பணியாளர் Hannah Gutierrez துப்பாக்கி வெடித்தது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். படப்பிடிப்பு நேரத்தில் போலியான குண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் உணவு இடைவேளையின்போது துப்பாக்கிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், அவர் கூறியுள்ளார் அதே நேரத்தில் பாதுகாப்பு விவகாரங்களில் தங்கள் கவனமுடன் செயல்படுவதாகவும் எதிர்பாராதவிதமாக இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும் Hannah Gutierrez விளக்கமளித்துள்ளார்.

போலி குண்டுகள் மற்றும் உண்மையான குண்டுகள் போட்டு வைக்கப்பட்டிருந்த மூன்று துப்பாக்கிகளில் ஒன்றை உதவி இயக்குனர் அலெக் பால்ட்வின் இடம் கொடுத்ததாகவும், முறையாக எந்தவித பரிசோதனையும் செய்யாமல் அவை உடனடியாக படப்பிடிப்புக்கு பயன்படுத்தப் பட்டதே இந்த விபத்திற்கு முழுமையான காரணம் என்றும் கூறப்படுகிறது.

Female cinematographer killed in 'Rust' movie shooting in New Mexico. Legal inquiry ordered into what actually happened..இந்த சம்பவம் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் படக்குழுவினரிடம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அலெக் பால்ட்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த சம்பவத்தால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அலெக் பால்ட்வின் தான் நடிக்க வேண்டிய அனைத்து படங்களின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விபத்து தான் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்திருந்தாலும் அலெக் பால்ட்வின் சிறிது காலம் தனது குடும்பத்துடன் இருக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

Link Source: shorturl.at/gtMS0