Breaking News

பிரிட்டன் நாட்டின் மதிப்புமிக்க விக்டோரியா கிராஸ் விருது பெறும் தகுதி பென் ராபர்ட்ஸ்-ஸ்மித்துக்கு கிடையாது என சக ராணுவ வீரர் தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Fellow soldier Ben Roberts-Smith has been ruled out of Britain's prestigious Victoria Cross award.

சிட்னி மார்னிங் ஹெரால்டு, ஏஜ் மற்றும் கான்பெர்ரா டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிக்கைகள் மீது ராணுவ வீரர் பென் ராப்ர்ட்ஸ் தொடர்ந்து அவமதிப்பு வழக்கு சிட்னி கூட்டாட்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுகுறித்து சிறப்பு விமானப் படை வீரர்கள் மூவர் சாட்சியம் அளித்தனர். அதில் தனது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒரு வீரர், பென் ராபர்ட்ஸுக்கு மதிப்புமிக்க விக்டோரியா கிராஸ் விருது வழங்கப்பட்டது தவறு.

ராணுவ நடவடிக்கைகளில் அவர் ஈடுபடவில்லை. போர் வியூகங்களை அவர் வகுத்தது கிடையாது. தாக்குதல் தொடர்பான திறன் அவருக்கு இல்லை. மற்றவர்கள் செய்த காரியங்களை இவர் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டனர். அதனால் அவர் விக்டோரிய கிராஸ் விருது பெற்றது அவமதிப்புக்குரியது என்று தெரிவித்தார்.

Fellow soldier Ben Roberts-Smith has been ruled out of Britain's prestigious Victoria Cross award..கடந்த 2010-ம் ஆண்டு டிசாக்கில் ஏற்பட்ட போரில் சிறப்பாக செயல்பட்டதற்காக பென் ராபர்ட்ஸ்-ஸ்மித்துக்கு விக்டோரியா கிராஸ் விருது 11-ம் ஆண்டு வழங்கப்பட்டது. இதுகுறித்து அப்போதே சர்ச்சை எழுந்தது. அதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அடையாளம் வெளிப்படுத்த விரும்பாத ராணுவ அதிகாரி, பென் ராபர்ட்ஸ் விக்டோரியா கிராஸ் விருது பெற தகுதியற்றவர் என்று கடந்த 2013-ம் ஆண்டு கூறினார்.

 

கிடத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து அதே கருத்தை பலரும் முன்வைத்து வருகின்றனர். எனினும், குறிப்பிட்ட பத்திரிக்கைகள் பென் ராபர்ட்ஸ் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக செய்திகளை வெளியிட்டன. சமீபத்தில் கூட்டாட்சி நீதிமன்றத்தில் விக்டோரியா கிராஸ் விருது குறித்து பேசிய ராணுவ அதிகாரி, பென் ராபர்ஸ் போர் குற்றங்களில் ஈடுபட்டது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து ஆஸ்திரேலியாவே எதிர்பார்கும் வழக்காக மாறியுள்ளது பென் ராப்ர்ட்ஸ் மற்றும் ஊடகங்களுக்கு எதிரான வழக்கு.