கனபெர்ராவுக்கு நிதி அமைச்சர் ஜோஷ் ஃபிரைடன்பெர்க் சென்றுள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். டெல்டா வகை கொரோனா பரவல் காரணமாக 2021 செப்டம்பர் இறுதி வாரத்தில் ஆஸ்திரேலிய பொருளாதாரம் 1.9 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது.
அதை தொடர்ந்து டிசம்பர் முடிவில் 3.4 சதவீத பொருளாதார வளர்ச்சியை ஆஸ்திரேலியா பதிவு செய்துள்ளது. எனினும் ஆண்டு முடிவில் 4.6 சதவீத வளர்ச்சியை ஆஸ்திரேய எட்டியுள்ளது மகிழ்ச்சியான செய்தியாகும். கொரோனா காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியா பல்வேறு இன்னல்களுக்கு ஆளானாலும், அதனுடைய பொருளாதார வளர்ச்சி நிலையானதாக உள்ளது. ஆனால் தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிடையே ஏற்றப்பட்டு வரக்கூடிய போர் காரணமாக இந்த நிலை மாறக்கூடும். உலகச் சந்தையில் எண்ணெய் விலை கடுமையாக ஏறும். இது பெட்ரோல், டீசல் விலைகளிலும் எதிரொலிக்கும். அதனால் ஆஸ்திரேலியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும் என்று கூறினார்.
Link Source: https://bit.ly/3sCqXy9