Breaking News

புதிய பாடத்திட்டம் ஆஸ்திரேலிய வரலாறு குறித்த தவறான புரிதலை இளம் தலைமுறையினருக்கு ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் Alan Tudge அச்சம் தெரிவித்துள்ளார்.

Federal Education Minister Alan Tudge fears the new curriculum could lead to a misunderstanding of Australian history among the younger generation..

ஆஸ்திரேலியாவில் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தின் வரைவு அறிக்கை கடந்த ஏபரல் மாதம் வெளியிட்டப்பட்டது. இந்த வரைவு அறிக்கை தற்போது அக்காரா எனப்படும் (Australian Curriculum, Assessment and Reporting Authority பரிசீலனையில் உள்ளது.

Federal Education Minister Alan Tudge fears the new curriculum could lead to a misunderstanding of Australian history among the younger generation. இந்நிலையில் இந்த புதிய பாடதிட்டத்தில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வரலாறு பாடத்தில், Anzac தினம் குறித்த வரலாற்று தரவுகளும் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரும் ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் தேதி Anzac தினம் கொண்டாடப்படுகிறது. முதலாம் உலகப்போரில் ஆஸ்திரேலிய- நியூசிலாந்து ராணுவ வீரர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த புதிய வரைவு பாடதிட்டத்தில் Anzac தினம் என்பதை ஒரு விவாதத்திற்கு உரிய தினமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Alan Tudge குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த செயல் அடுத்த தலைமுறையினர் மத்தியில் தவறான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்கட்சி நிர்வாகி Tony Burke, வரலாறு என்பது நடந்த நிகழ்வுகளை அப்படியே அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது என்று தெரிவித்துள்ளார். சில சம்பவங்கள் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் என்றும், சில நிகழ்வுகள் அவ்வாறு இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நினைவேந்தல், போர் வெற்றி கொண்டாட்டம் ஆகிய இரு கருத்தியலை அடிப்படையாக கொண்டு இந்த விவாதம் தற்போது தொடங்கியிருப்பதாக கருதப்படுகிறது.

தற்போது விவாதத்தை கிளப்பியிருக்கும் இந்த வரைவு பாடத்திட்டம், அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுக்கு பிறகே அமலுக்கும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://bit.ly/3ma1t87