Breaking News

விக்டோரியா மாகாணத்தில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை எட்டியதா என்ற அச்சம் சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Fears have been raised among health officials as to whether the corona infection has reached a social spread in the state of Victoria

விக்டோரியா மாகாணத்தில் தற்போது வரை 63 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தனிமைபடுத்துதல் விடுதியில் இருந்த வெளியேறிய நபர் மூலமாக விக்டோரியாவில் தொற்று பரவல் ஏற்பட்ட தொடங்கியவுடன் அதை கட்டுப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Fears have been raised among health officials as to whether the corona infection has reached a social spread in the state of Victoria,.விக்டோரியாவில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அதிகாரி ஜெரோன் வெய்மர், புதிதாக விக்டோரியாவில் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் இருவர் தொடர்பறிதல் மூலமாக தொற்று பரவியிருக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி படுத்துகின்றனர்.

ஆனால் மேலும் ஒருவருக்கு எப்படி தொற்று வந்தது என்பது குறித்து தெரியாததால் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.

விக்டோரியா மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வியாழக்ழமையுடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் புதிதாக ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது , நிலமையை மேலும் மோசமாக்கியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஜேரோன் தெரிவித்துள்ளார்.

Fears have been raised among health officials as to whether the corona infection has reached a social spread in the state of Victoria..இந்த வைரஸ் மாதிரி முற்றிலும் மாறுபட்டதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மிக வேகமாக இந்த வைரஸ் பரவுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் மாதிரிகளை பகுப்பாய்வு செய்த போது, தெற்கு ஆஸ்திரேலிய பகுதியில் இருந்து பரவிய வைரஸுடன் ஒத்து போவதாக தெரிவிக்கும் அவர், மெல்போர்ன் பகுதியில் கண்டறியப்பட்ட வைரஸ் எங்கிருந்தது வந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர, அரசால் தொற்று பாதித்த நபர்கள் வந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு வந்து சென்றவர்கள் தங்களை பரிசோதித்துகொள்ள வேண்டும் என்று ஜேரோன் வலியுறுத்தியுள்ளார்.

விக்டோரியா மாகாணத்தின் முதன்மை சுகாதாரத்துறை அதிகாரி பிரெட் சுட்டன், விக்டோரியாவின் நகரங்களையும், கிராமங்களையும் பிரிக்கும் ரிங் ஆப் பயர் திட்டத்தை அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணி நேரத்தில் 42,699 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/2STgaR6