Breaking News

பிலிஃபைன்ஸின் தலைவரித்தாடும் பட்டினி பஞ்சம்..!!

Famine in the Philippines

ராய் புயலுக்கு பிறகு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டினியால் அவதிப்பட்டு வருவதாக பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மாநில ஆளுநர் ஆர்தர் யாப் தெரிவித்துள்ளார்.

Famine in the Philippines..பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய ராய் புயலால் அந்நாடு கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அத்தியாவச தேவைகள் எதுவும் கிடைக்காமல் அங்குள்ள மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அங்கு தினந்தோறும் உணவுப் பிரச்னை அதிகரித்து வருவது கவலை அடையச் செய்வதாகவே உள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் போஹோல் மாநில கவர்னர் ஆர்தர் யாப் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், கையிருப்பிலுள்ள நிதி முடிவுக்கு வந்துவிட்டது. இதனால் அரிசி உள்ளிட்ட பிற உணவுகளை பாதுகாக்க முடியாது. போஹோல் மாநிலத்தில் வசிக்கும் 1.2 மில்லியன் மக்கள் கடந்த 5 நாட்களாக மின்சாரமில்லாமலும், மொபைல் சர்வீஸ் கிடைக்காமலும் இருக்கின்றனர்.

Famine in the Philippines.பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் சமூக நலத்துறை 35,000 உணவுப் பொட்டலங்களை அனுப்புவதாக உறுதியளித்தது. இது மாகாணத்தின் 375,000 குடும்பங்களுக்குப் போதுமான அளவு இல்லை. எனினும் அவை கூட இன்னும் வந்துசேரவில்லை என்று கவலை தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் வீசிய சக்திவாய்ந்த ராய் சூறாவளி காற்றால், அந்நாட்டின் மத்திய பகுதி வரலாறு காணாத அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 375 பேர் வரை இந்த சூறாவளி காற்றுக்கு பலியாகியுள்ளனர். போஹோலில் மட்டும் 100 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/30Pn0LH