Breaking News

பள்ளி மாணவர்களுக்கு முகக் கவசம் கட்டாயம்..? அரசு முயற்சி..!!

பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து வருவதற்கு பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விக்டோரியா மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Face mask mandatory for school students

விக்டோரியா மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு ஜூன் மாத கணக்குடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டு ஜூன் மாதத்தில் 99 சதவீதம் அளவுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Face mask mandatory for school students,இதன்காரணமாக பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி பள்ளிக்கு வரும்போதும், வகுப்பறைக்குள் இருக்கும்போதும் மாணவர்கள் முகக்கவசம் அணிவதை பள்ளி நிர்வாககங்கள் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். இந்நடவடிக்கைகள் குளிர்காலம் முடியும் வரையில் அமலில் இருக்கவேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த கோரிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதுபோன்ற முயற்சிகள் பெற்றோர்களை கவலை அடையச் செய்யும். பெரியவர்கள் முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளையும் முகக்கவசம் அணிவதால் நிலைமை மேலும் பாதிக்கப்படும் என்று கூறினார்.

ஆனால் இதை சுகாதாரத்துறை அமைச்சர் மேரி-ஆன் தாமஸ் முற்றிலுமாக மறுத்துள்ளார். மாணவர்கள் முகக்கவசம் அணிவது தொடர்பாக அரசு கோரிக்கையை மட்டுமே விடுத்துள்ளது. அதற்கான முடிவினை பெற்றோர்கள், ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகத்தினர் கூட்டாக எடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.