கோவிட் 19 – ஒமைக்ரான் பாதிப்பு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவத் தொடங்கி உள்ளதாகவும், பாதிக்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜனவரி முதல் வாரத்தில் மட்டும் 7 மில்லியன் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதே நிலை நீடித்தால் அடுத்த 6 முதல் 8 வாரங்களில் ஒவ்வொரு மாகாணங்களில் தலா 50 சதவீதம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று சுகாதார ஆய்வு நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனை சேர்ந்த அந்த ஆய்வு நிறுவனம் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும், ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.
53 நாடுகளில் 50 நாடுகளிலும், மத்திய ஆசிய பகுதிகளிலும் தொற்று பாதிப்பின் தாக்கம் வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என்றும் அந்த அமைப்பை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தொற்று பாதிப்பின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பூசி நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட நாடுகளை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கு முந்தைய திரிபுகளை விட ஒமைக்ரான் தொற்று நுரையீரலில் பெரிய அளவில் பாதிப்பகளை ஏற்படுத்த வில்லை என்றாலும், இதனை நிறுவும் வகையிலான ஆய்வு முடிவுகள் தேவை என்றும் உலக சுகாதார மையம் கூறியுள்ளது.
முடிவு இல்லாத சாதாரண காய்ச்சல் போன்ற ஒன்றாக கோவிட் தொற்று மாறக்கூடிய நிலை ஏற்படும் என்றும், தற்போது உருவாகி வரும் புதிய திரிபுகளால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என்றாலும் அது ஏற்படுத்தும் மிக மோசமானதாக இருப்பதாக ஸ்பெயின் பிரதமர் Pedro Sanchez கூறியுள்ளார்.
அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனை என்ற நிலை தொடர வேண்டும் என்றும் அதன் மூலமாகவே நாம் தோற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய நாடுகளுக்கான அவசரகால அதிகாரி Catherine Smallwood தெரிவித்துள்ளார். நாடுகள் பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஏழை நாடுகளுக்கான தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கைகொடுத்து உதவ வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
Link Source: https://ab.co/3FhLtHt