கடும் மழை வெள்ளம் காரணமாக பிரிஸ்பேன் நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அங்கு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் கரையோரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்வதற்காக படகுகள் மற்றும் கிரேன் உதவியுடன் நதியில் சென்று சீரமைப்பு நடவடிக்கைகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.
தென்கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 50 ஆயிரம் வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளது அந்த பகுதி மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுவரை வெள்ள பாதிப்புகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 2011 ம் ஆண்டுக்கு பிறகு பிரிஸ்பேன் நதியில் வெள்ளப்பெருக்கு உச்சபட்சத்தை எட்டியுள்ள நிகழ்வு தற்போது நடந்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி பிரிஸ்பேன் நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மேயர்
Adrian Schrinner கேட்டுக்கொண்டுள்ளார்.
400 டன் எடை கொண்ட கப்பல் ஒன்றின் மேல் 150 டன் எடை கொண்ட கிரேன் உடன் பிரிஸ்பேன் CBD பகுதியில் வந்து கொண்டிருக்கும் நிலையில் அது கடுமையான சேதத்தை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.
தென்கிழக்கு குயின்ஸ்லாந்தின் ஊரக பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் மழை வெள்ள பாதிப்புகளை மீட்பதற்காக பல்வேறு குழுக்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிப்பு, முறிந்து விழுந்தது, வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியது உள்ளிட்ட பல்வேறு இடங்களை அந்தக் குழுவினர் சீரமைப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த சில நாட்களில் மழைப்பொழிவு எதிர்பார்த்த அளவை விட கூடுதலாக இருக்கும் என்றும் ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இருந்து உடனடியாக மக்கள் வெளியேற வேண்டும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருந்து இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக மீட்கப் பட்டிருப்பதாகவும் மாகாண அரசு குறிப்பிட்டுள்ளது.
Link Source: https://ab.co/3tszzqC