இதே போன்று பிரிஸ்பேன் வடக்கு பகுதியில் சாலையை கடக்க முயன்ற நபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். Yesk, தெற்கு பிரிஸ்பேன் பகுதியில் ஏராளமானோர் இதுவரை மாயமாகி இருப்பதாகவும் அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தேடி வருவதாகவும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தெரிவித்துள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கனமழை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது குயின்ஸ்லாந்து மாகாணத்தில் மழை பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் அது நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அதிகரித்துள்ள நிலையில் அங்கும் ஏராளமான பாதிப்புகளை மக்கள் சந்திக்க தொடங்கியுள்ளனர். ஒரேநாளில் உச்சபட்ச அளவில் மழைப்பொழிவு பதிவானதால் மழை வெள்ளத்தில் சிக்கிய 500 பேர் இதுவரை மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் மேலும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப்படையினர் பல்வேறு இடங்களில் முகாம் இட்டுள்ளனர்.
உக்ரைன் தலைநகர் Kyiv மற்றும் முக்கிய நகரங்களான Karkhiv உள்ளிட்ட இடங்களை இலக்குவைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கு தொடர்ந்து அபாய சங்கு ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது அரச படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதால் பெரும்பாலான பகுதிகள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
தொடர்ந்து வான்வழி தாக்குதலை மேற்கொண்டு வரும் ரஷ்ய படைகள் உடனடியாக தங்களது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார். Kherson அருகில் இருந்த முக்கிய நீர் ஆதாரமான அணை ஒன்றையும் ரஷ்யப் படைகள் குறி வைத்து தகர்த்துள்ளனர்.
சிட்னியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் அது மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் அது எப்போது தன்னுடைய சேவையை தொடங்குகிறது என்பது தொடர்பாக மிக அதிக அளவில் இணையத்தில் ஆஸ்திரேலியர்களால் தேடப்பட்டு உள்ளது. மேலும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள நிலையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் பங்குச்சந்தை மற்றும் எரிபொருள் விலை ஏற்றத்தில் எந்த அளவுக்கு எதிரொலிக்கும் என்பது தொடர்பான விவரங்கள் மிக அதிகமாக ஆஸ்திரேலியர்களால் இணையத்தில் தேட பட்டுள்ளன.
Link Source: https://ab.co/3C0uQAh