Breaking News

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் தோல் புற்றுநோய் பாதிப்பு கவலையடைச் செய்வதாகவும், அடுத்த பத்தாண்டுகளில் இந்த நோயினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உலகளவில் 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Experts say the growing incidence of skin cancer in Australia is worrying and that the number of people diagnosed with the disease will increase by 50 per cent worldwide in the next decade.

உலகளவில் தோல் புற்றுநோயினால் அதிகம் பேர் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ள நாடுகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முதன்மை வகிக்கிறது. தோல் புற்றுநோயினால் உடல்நலனில் பல பாதிப்புகள் உருவாகக்கூடும். மேலும் பல இடங்களில் அது கேன்சரை உருவாக்கும் உயிரிகளை உருவாக்கிடும் என நிபுணர்கள் கருத்து கூறுகின்றனர்.

ஜாமா டெர்மடாலஜி என்கிற இதழில் வெளியான கட்டுரையில் 2020-ம் ஆண்டு தோல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 352,000-மாக உள்ளது. இது 2040-ம் ஆண்டு 510,00-ஆக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுளது. அதேபோல இன்னும் இருபது ஆண்டுகளில் இந்த நோயினால் 57 ஆயிரம் முதல் 96 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கலாம் என்றும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Experts say the growing incidence of skin cancer in Australia is worrying and that the number of people diagnosed with the disease will increase by 50 per cent worldwide in the next decadeஇதுகுறித்து ஆஸ்திரேலியாவின் தோல் புற்றுநோய் கல்லூரி இயக்குநர் மைக்கேல் கிம்லின் தெரிவித்துள்ள கருத்து மருத்துவ உலகில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது வரும்காலங்களில் தோல் புற்றுநோயினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சுனாமி அளவு அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், பொதுநல மருத்துவர்களும் இந்த பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் விதமான பயிற்சிகளை வழங்க அரசு நடைமுறைகள் வகுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் மூட்டு வலி, இருமல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அப்படிப்பட்டவர்கள் ஆரம்பத்தில் பொதுநல மருத்துவர்களை தான் சந்திப்பார்கள். அதனால் சிகிச்சையின் ஆரம்பக் கட்ட நிலையை அங்கிருந்து தொடங்குவது தான் சரி. தன்னிடம் இதுபோன்ற பாதிப்புகளுடன் வரும் நபர்களுக்கு பொதுநல மருத்துவர்கள் சரியான வழிமுறையை காட்டினால், அவர்களை எளிதில் காப்பாற்றிவிடலாம் அதனால் இந்த அவசியத்தை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்று மருத்துவர் மைக்கேல் கிம்லின் தெரிவித்துள்ளார்.