Breaking News

ஆஸ்திரேலியாவில் 50-59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

Expert panel recommends Pfizer vaccine for people aged 50-59 in Australia.

ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி சுமார் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள், முதியோர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முதற்கட்டமாக தொடங்கியது. இவர்களுக்கு ஆரம்பத்தில் அஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில்,ஒரு சிலருக்கு இரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

Expert panel recommends Pfizer vaccine for people aged 50-59 in Australiaஇந்நிலையில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 10 லட்சம் அதிகமானவர்களுக்கு அஸ்டரா ஜெனிகா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும், 7 பேர் கடுமையான இரத்த உறைதல் பாதிப்பால் பாதிக்கப்பட்டனர். இதனால் 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செல்வதில் ஒரு தயக்கம் உள்ளது. இதனை போக்கும் விதமாக 50-59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மருந்து கட்டுப்பாட்டு துறையின் இந்த அறிவிப்புக்கு 50 வயதை கடந்தவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தொற்று நோய் துறை சிறப்பு மருத்துவர் ஆனந்த ராஜையா, அரசின் இந்த முடிவு காலதாமதனாமதாக இருந்தாலும், தற்போது எடுத்துள்ள முடிவால் பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருவார்கள்
என்று தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி செலுத்தப்பட்ட தால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 22 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3gIritr