Breaking News

யூரோ கோப்பை கால்பந்து 2020 : இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இத்தாலி : பெனால்டி ஷூட்அவுட் முறையில் வெற்றியை வசமாக்கிய வீரர்கள்

Euro Cup Football 2020 Italy beat England to win trophy. Penalty shootout winners

இங்கிலாந்தின் வெம்ப்லி மைதானத்தில் நடைபெற்ற யூரோ கோப்பை 2020 இறுதி போட்டியில் கடைசி நேர பரபரப்பில் வெற்றியை தனதாக்கியது இத்தாலி அணி. இதன்மூலம் இறுதிப் போட்டியில் சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தி யூரோ கோப்பையை கைப்பற்றியுள்ளது இத்தாலி அணி.

இரு அணிகளும் 1-1 என சம நிலையில் இருந்த நிலையில் கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனை அடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் இரு அணிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணி வெற்றி பெற்றது.

Euro Cup Football 2020. Italy beat England to win trophy. Penalty shootout winners.ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே முதல் கோல் அடித்து தனது கனவு கோப்பைக்கு வழியமைத்தது இங்கிலாந்து அணி. ஆனால் அடுத்தடுத்து இத்தாலி அணியின் சிறப்பான தடுப்பு ஆட்டத்தால் இங்கிலாந்து அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி இரண்டாவது பாதியில் சோபிக்கவில்லை. ஆனால் படிப்படியாக ஆட்டத்தில் விறுவிறுப்பை கூட்டிய இத்தாலி அணி இறுதியாக பெனால்டி ஷூட் அவுட் முறையில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு வழி ஏற்படுத்தியது. இரண்டாவது பாதியில் 67 வது நிமிடத்தில் இத்தாலி அணியின் லியோனார்டோ போனுசி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

இத்தாலிய ஸ்ட்ரைக்கர் வீரர் Andrea Belotti பெனால்டி ஷூட் அவுட் முறையில் முதல் கோலை பதிவு செய்த நிலையில், இங்கிலாந்து அணி அடுத்தடுத்து தடுமாற்றத்தை சந்தித்தது.

Marcus Rashford, Jadon Sancho ஆகிய இருவரும் பெனால்டி ஷூட் அவுட் முறையில் சிறப்பாக செயல்படவில்லை. Donnarumma அடித்த பந்தை 19 வயதான Saka தடுத்ததன் மூலம் வெற்றி இத்தாலிய வசமானது.

Link Source: https://ab.co/3ySSETY