Breaking News

விக்டோரியாவில் சம அளவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை : நியூ சவுத் வேல்ஸ் எல்லையை திறக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை

விக்டோரியாவில் நாள் ஒன்றுக்கான தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1438 ஆக உள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒருநாள் தொற்று பாதிப்பு 941 உள்ளது. இந்நிலையில் மூடப்பட்டிருக்கும் எல்லைகளை திறக்க வேண்டும் என்றும், நியூ சவுத் வேல்ஸ் உடனான வர்த்தகத்தை தொடரும் பட்சத்தில் நிலைமை சீரடைய வாய்ப்பிருப்பதாக வர்த்தகர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது உள்ள கட்டுப்பாடுகளால் வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதே நிலை தொடர்ந்தால் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Equal number of epidemics in Victoria.இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக சம அளவில் இருப்பதால் நியூ சவுத் வேல்ஸ் எல்லைகளைத் திறக்கும் பட்சத்தில் வர்த்தகம் மேற்கொள்வதற்கான சூழல் உருவாகும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். குறிப்பிட்ட மாகாணங்களில் அரசு அறிவித்த திட்டங்கள், சலுகைகள் செயல்படுத்த முடியாமல் இருப்பதற்கும் எல்லைகள் மூடப்பட்டுள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது.

மாகாண எல்லைகள் மூடப்பட்டு இருப்பதால் ஏற்பட்டுள்ள நிலையில் இழப்பை சரி செய்வதற்காக குயின்ஸ்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அரசு 52.8 பில்லியன் டாலர் அளவிலான திட்டத்தை அறிவித்த நிலையில் அதுவும் எல்லைகள் மூடப்பட்டு இருக்கும் காரணத்தால் முடங்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Equal number of epidemics in Victoria. Request from various quarters to open New South Wales border.குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களை காட்டிலும் விக்டோரியா உடனான எல்லைகள் மூடப் பட்டிருப்பதால் உணவுச்சங்கிலி பெருமளவு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் விவசாய பொருட்கள் விற்பனை தேங்கி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மாகாணம் உணவுச் சங்கிலியில் கடைசி இடத்தில் இருப்பதாகவும் வணிகர்கள் கூறியுள்ளனர். எனவே இந்த கடுமையான சூழலை போக்குவதற்காக வர்த்தகத்திற்கான அனைத்து ஆதரவையும் மாகாண, மத்திய அரசுகள் உடனடியாக அளிக்க வேண்டும் என்றும், பெருமளவு இழப்பை சந்தித்து வர்த்தகம் முற்றிலுமாக முடங்கும் நிலையை தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Link Source: https://ab.co/3oo7O1e