Breaking News

இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் காலமானார். அவருக்கு வயது 99.

England Queen second Elizabeth husband prince Philip has died at age of 99 1

பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட இரங்கல் செய்தியில் Duke of Edinburg என்று அழைக்கப்படும் இளவரசர் பிலிப் வெள்ளிக்கிழமை இரவு 9.01மணிக்கு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

England Queen second Elizabeth husband prince Philip has died at age of 99இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சிப்பணியில் இருந்தவர் இளவரசர் பிலிப் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்துவந்தார் இளவரசர் பிலிப்,, 2020 கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற முன்கள பணியாளர்களின் சேவையை பாராட்டியிருந்தார்.

கடந்த 2021 பிப்ரவரி மாதம் உடல் நலம் பாதிக்கபபட்ட நிலையில் கிங் எட்வார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்படட இளவரசருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக , 2012ல் நடைபெற்ற ராணியின் வைர விழா நிகழ்ச்சியில் இளவரசர் பிலிப் பங்கேற்கவில்லை.

60 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிப்பணியில் இருந்த இளவரசர் பிலிப் கேம்பிரிடிஜ், எடின்பர்க் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

England Queen second Elizabeth husband prince Philip has died at age of 99.வெளிப்படையாக பேசும் குணம் கொண்டிருந்த இளவரசர் பிலிப், கிரீஸ் நாட்டில் corfou தீவில் 1921 ஆம் ஆண்டு அரச குடும்பத்தில் பிறந்தவர். அரசு குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இரண்டாம் உலகப்போரில் இவர் HMS போர் கப்பலில் பணியாற்றினார்.

இரண்டாம் எலிசபத் ராணிக்கு , இளவரசர் பிலிப்புக்கும் இடையே 1946 ல் காதல் மலர்ந்தது. ஆனால் இராஜாங்கம் இல்லாத இளவரசர் என்று இளவரசர் பிலிப்புடனான காதலுக்கு ராணி எலிசபத்தின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னாளில் 1947ல் Westminster Abbey அரண்மனையில் அவர்களின் திருமணம் நடைபெற்றது.

இளவரசர் பிலிப்பின் மரணத்தையொட்டி 8 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.