Breaking News

ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பார்-ரைட் வேட்பாளர் மரீன் லு பென்னை வீழ்த்தி மீண்டும் அதிபரானார் இம்மானுவேல் மெக்ரான்.

Emmanuel Macron defeats Bar-Right candidate Marine Le Pen in the French general election.

கடந்த 24-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளின் படி, தற்போதைய அதிபர் 58.8 சதவீத வாக்கு பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லூ பென் 42 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன்மூலம் மீண்டும் அதிபராக தேர்வாகியுள்ளார் இம்மானுவேல் மெக்ரான்.

இரண்டாவது முறையாக பிரான்ஸ் நாட்டின் அதிபராக தேர்வாகியுள்ள இம்மானுவேல் மெக்ரானுக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். எல்லாருக்குமான அதிபராக செயல்படுவேன் என்று தன்னுடைய வெற்றி உரையில் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் கூறியுள்ளார்.

Emmanuel Macron defeats Bar-Right candidate Marine Le Pen in the French general election..ஆஸ்திரேலியாவில் அனுசரிக்கப்பட்ட அன்சாக் நாளில் பல்லாயிரக்கணக்கானோர் ஊர்வலகத்தில் பங்கேற்றனர். சிட்னியில் செண்டோடாப் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மக்களின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது அதேபோல மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் பகுதிகளில் நடைபெற்ற கூட்டத்திலும் பொதுமக்கள் பலர் திரளாக பங்கேற்று, உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்,

திருநர் சமூகத்தினரை குறித்து சர்ச்சையாக பேசிய ஃபெடரல் லிப்ரல் கட்சியின் வேட்பாளர் கேத்ரீன் டேவீஸ், தன்னுடைய குடும்பத்தினருடன் சிட்னியை விட்டு வெளியேறி வேறு பகுதியில் குடிபெயர்ந்தனர். இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் மாகாண போலீசார் எந்தவித தகவலையும் வெளியிட மறுத்துவிட்டனர்.