Breaking News

தாஸ்மானியாவில் ஓராண்டுக்கு முன்னதாகவே தேர்தல் : இன்று நடைபெறும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Election in Tasmania a year earlier. Voting ends today

ஆஸ்திரேலியாவின் தீவு மாகாணமான தாஸ்மானியாவில் ப்ரீமியரை நேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கு இன்னும் ஒராண்டு காலம் உள்ள நிலையில் பெரும்பான்மை பலம் இல்லாததால் தற்போதே தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், அதற்கான வாக்குப்பதிவு இன்று விறுவறுப்பாக நடைபெற்று வருகிறது.

இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையிலான போட்டியில் இருதரப்புமே அரசு பெரும்பான்மையானதாக இருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த வகையில் எதிர்க்கட்சிக்கும், சுயேட்சைகளுக்கும் அதிக ஆதரவு பெருகி வருகிறது. இருந்தாலும், தலைநகரான ஹோபர்ட் இருக்கையில் இடம் பெறாவிட்டால் தொங்கு பாராளுமன்றம் அமையும் சூழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Election in Tasmania a year earlier, Voting ends today.ப்ரீமியர் Peter Gutwein வாக்காளர்களிடம் தனது இறுதிக்கட்ட உரையை நிகழ்த்தும் போது, சிறுபான்மை அரசு அமைய ஒரு போதும் வாக்களிக்காதீர்கள் என கேட்டுக் கொண்டார். ஒரு வேளை ப்ரீமியராக தான் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் உடனடியாக ராஜினாமா செய்து விடுவேன் என்பதை உறுதிபடக் கூறுவதாக Peter Gutwein தெரிவித்துள்ளார். முதல் நாளில் இருந்து தன்னுடைய பேச்சில் மாற்றமில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தெளிவான திட்டங்களை கொண்ட நிச்சயமான அரசாங்கம் அமைய விடுதலை கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கோரியுள்ளார்.

மாவேரிக் உறுப்பினர் Sue Hickey விடுதலைக்கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக மாறியதால் அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழல் எற்பட்டு முன்னதாகவே தேர்தல் அறிவப்பு வெளியாகி உள்ளது.

Rebecca tasmaniaஎதிர் தரப்பில் போட்டியிடும் தொழிலாளர் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர். தங்களது ஒரே இலக்கு தங்கள் அணி ஒரு பெரும்பான்மை அரசை அமைக்க வேண்டும் என்பது தான் அவர்கள் கூறியுள்ளனர்.

கோரோனா பாதிப்பால் நிலை குலைந்துள்ள வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை மீட்டு எடுக்க புதிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. அமைப்பு ரீதியான மாற்றங்கள் ஏழு ஆண்டுகளுக்கு பின் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர்.

Link Source: https://bit.ly/3398sE5