Breaking News

ஆஸ்திரேலியாவில் பூஸ்டர் தடுப்பூசிக்கு காத்திருக்கும் முதியோர் மற்றும் முதியோர் பராமரிப்பாளர்கள் : 8 மாதங்கள் நிறைவடைந்தும் மூன்றாவது தவணைக்கு காலம் தாழ்த்துவதாக புகார்

Elderly and geriatricians awaiting booster vaccination in Australia. Complaint of delay of the third installment after completion of 8 months

ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரான் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு பூஸ்டர் தடுப்பூசி கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டு நிறைவுபெற்ற முதியோர் மற்றும் முதியோர் பராமரிப்பு அவர்களுக்கு 8 மாதங்கள் கடந்தும் இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக அவர்கள் தங்கள் குடும்பங்களை சந்திக்க காத்திருந்த போதும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாத காரணத்தால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக சிட்னியை சேர்ந்த Malinda Holmes, 84 வயதான தன் தந்தைக்கு மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்துவது குறித்து பலமுறை கேள்வி எழுப்பியும் எந்தவித பதிலும் இல்லை என்றும், தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதால் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அச்சம் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கான அனுமதி கடிதத்தில் சில மாதங்களுக்கு முன்பே நாங்கள் கையெழுத்து போட்டு விட்டதாகவும், ஆனால் இதுவரைக்கும் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசி தவளைகள் கிடைக்கவில்லை என்றும் நர்சிங் ஹோம் தரப்பில் கூறப்படுவதாக Malinda தெரிவித்துள்ளார்.

Elderly and geriatricians awaiting booster vaccination in Australia. Complaint of delay of the third installment after completion of 8 months.கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தந்தையை வீட்டிற்கு அழைத்து செல்வதாக திட்டமிட்டிருந்த நிலையில், ஜன்னல் வழியாக மட்டுமே தனது தந்தையை சந்திக்க அனுமதி அளித்ததாகவும் இது தங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்ததாகவும் Malinda Holmes வருத்தம் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்னுரிமை பட்டியலில் உள்ள முதியோர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தாமல் இருப்பது மிகப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், அறிவித்த பின்னர் இத்தனை மாத காலம் தாமதப்படுத்துவது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் Malinda Holmes அச்சம் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 24ஆம் தேதி தகவலின்படி முதியோர் மற்றும் முதியோர் பராமரிப்பு பணி யாளர்கள் 385 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒமைக்ரான் தோற்று பாதிக்கப்பட்ட 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முதியோர் மற்றும் முதியோர் பராமரிப்பு பணியாளர்களுக்கு உடனடியாக பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Link Source: https://bit.ly/32LLwOt