ஆஸ்திரேலியாவின் பின் தங்கிய பகுதிகள், கிராமப் புறங்கள் மற்றும் தொலைதொடர்பு இல்லாத ஊர்களில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது. இதனால் கல்வி பயில்வதில் பின் தங்கிய மாணவர்கள் மற்றும் ஆர்வமில்லாத மாணவர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இதுபோன்ற மாணவர்களுக்கு கற்றல் கோளாறு ஏற்படும். ஒருவேளை, தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்னை இருந்தாலும் அதை கல்வியோடு தொடர்புப்படுத்தி பார்ப்பார்கள். பாடங்களை அல்லது ஒரு செயலை கவனிப்பதில் சிரமும் அவர்களுக்கு உருவாகும் என ஆஸ்திரேலிய உளவியல் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. இவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கல்வி பயில்வதில் சிரமம் காட்டும் மாணவர்கள், நன்றாக படிக்கும் மாணவர்களிடையே விலகி இருக்க துவங்குவார்கள். இதனால் அவர்களுடைய மனத்தில் ஏற்றத்தாழ்வு, தாழ்வு மனப்பான்மை, பகைமை போன்ற எண்ணங்கள் உருவாகும் என உளவியல் சங்கம் கூறியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கடைமடைப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் பல தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் போதி நிதி ஒதுக்குவதில் சிக்கல், பின் தங்கிய பகுதிகளுக்கு அரசு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பது போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. இதனால் தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதில் சிரமம் ஏற்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய மத்திய கல்விதுறை அமைச்சர் கரேனா ஹேத்ரோப், ஆஸ்திரேலியாவில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது பெரும் நெருக்கடியை உருவாக்கி வருகிறது. ஆனால் தொடர்ந்து இந்த பிரச்னையை அரசு கவனித்து வருகிறது. இதற்கு விரைவில் நல்ல தீர்வு காணப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.