இந்தியாவில் இருந்து விமானங்களில் வந்து விடுதிகளில் தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு தொற்று உறுதியாவது அதிகரித்து வருவதை அடுத்து இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா வரும் விமானங்களை குறைக்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் உச்ச பாதிப்புகளோடு அதிக ஆபத்து கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா செல்வோருக்கும் இதே நிலை தான் என்பது கவலைக்குரியதாக மாறியுள்ளது.
விமானப் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து முடிவுகளை பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்கள் செல்ல செல்ல பாதிப்பு நாடுகளின் பட்டியல் நீள்கிறது என்றும், இந்தியா போன்ற நாடுகள் வெளிப்படையாக மற்ற நாடுகளைவிட ஆபத்தான நிலையில் உள்ளதாக தேசிய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ஸ்காட் மோரிசன் பேசியுள்ளார். இந்தியாவில் இருந்து வந்து விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களில் அதிகமானோருக்கு தொற்று உறுதியானதே இதற்கு சான்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் மிக மோசமாக, அமெரிக்காவின் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையான 2 லட்சத்து 97 ஆயிரத்து 430 ஐ முறியடித்து 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 ஆக பதிவாகி வருகிறது.
பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து முறையாக கட்டுப்படுத்தாததன் விளைவாக தற்போது 15.93 மில்லியன் பாதிப்பையும், 1 லட்சத்து 84 ஆயிரம் உயிரிழப்புகளையும் இந்தியா சந்தித்துள்ளது.
இதே நிலை தொடரும் மற்ற நாடுகளுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. லண்டனை போல அதிக ஆபத்துடைய நாடுகளின் பட்டியலை தயாரித்து அதனை பின்பற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை விடுதி தனிமைப்படுத்துதல் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் என்ற வாதத்தை நிராகரித்துள்ள மோரிசன், நாம் அதிகரித்து வரும் உலகளாவிய பெருந்தொற்றின் மையப்புள்ளியில் இருக்கிறோம் என்பதையே காட்டுவதாகவும் கூறியுள்ளார்.
வேறு சில மாகாணங்களிலும் தனிமைப்படுத்தலில் இருக்கும் நபர்களில் தொற்று உறுதியானவர்களில் 40% பேர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்றும், அதிக பாதிப்பு கொண்ட நாடுகளில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்ப கட்டுப்பாடுகளுடன் கூடிய வாய்ப்பை ஆஸ்திரேலியா வழங்கி வருவதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
Link Source: https://cutt.ly/gv8AWbX