Breaking News

நியூசவுத்வேல்ஸ் விடுபட்ட தொற்றுத் தொடர்பை கண்டறியமுடியாததன் எதிரொலி : சிட்னியில் கோவிட் 19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

Echoes of New South Wales missing contagion. Covid 19 restrictions relaxed in Sydney.

வரும் திங்களன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக சிட்னி அறிவித்துள்ளது. நியூசவுத்வேல்ஸ்-ல் தொற்று உறுதியான ஓட்டல் ஊழியரின் இணைப்பை கண்டறிவது மிகப்பெரும் சிக்கலானது. வேறு யாருக்கும் அவர் மூலம் தொற்று பரவாத நிலையிலும், இவருக்கு யாரிடம் இருந்து தொற்று உறுதியானது என்ற தகவலையும் கண்டறிவதில் கடும் குழப்பம் ஏற்பட்டது. சுகாதாரத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டும் விடுபட்ட தொற்று தொடர்பை கண்டறியமுடியவில்லை. எனவே இந்த தளர்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Gladys Berejiklianஅதே நேரத்தில் நியூசவுத்வேல்ஸ் அரசு பல்வேறு புதிய தனிமனித இடைவெளி விதிமுறைகளை அறிவித்துள்ளது. கடந்த மே 5ம் தேதி கிழக்கு சிட்னியின் ஊரகப்பகுதிகளில் கணவன், மனைவி இருவருக்கும் தொற்று உறுதியான நிலையில் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து பெரும்பாலான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்றும், சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்னும் தனிமைப்படுத்துதலில் இருந்த நபருக்கு எப்படி தொற்று பரவியது என்பதை கண்டறியவில்லை என்றும் ப்ரீமியர் Gladys Berejiklian கூறியுள்ளார்.

Echoes of New South Wales missing contagion, Covid 19 restrictions relaxed in Sydney.இதனால், 17ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் தற்காலிக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும், தனிநபரின் வீடுகளுக்கு விருந்தினர்களின் வருகைக்கு இருந்த கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கப்படுகிறது. மேலும், இரவுகேளிக்கை விடுதிகளில் கூடுதல், குழுவாக இணைந்து பாடுதல், உள்ளரங்குகளில் நின்று அருந்ததுல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்துகளில் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்றும், அதே நேரத்தில் மருத்துவமனை வளாகங்களில் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நியூசவுத்வேல்ஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டார்லிங் துறைமுகத்தில் உள்ள ராயல் பார்க் ஓட்டலில் இம்மாத தொடக்கத்தில் வெளிநாட்டில் இருந்த வந்த நபர் ஒருவருக்கு தொற்று உறுதியான நிலையில், அவருக்கு யார் மூலம் தொற்று பரவியது என்பதை கண்டறிந்து உள்ளதாகவும், மரபணு சோதனையின் மூலம் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளதாகவும் நியூசவுத் வேல்ஸ் தலைமை சுகாதார அதிகாரி டாக்டர். Kerry Chant கூறியுள்ளார். ஆனால், இந்த நபரை பொறுத்தவரை தனிமைப்படுத்துதல் மற்றும் ஊழியர்களின் தொற்று வளையத்திலும் வராததால் மரபணு சோதனை முக்கியமானதாகக் கருதப்பட்டது என்றும் டாக்டர். Chant தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தொற்றுப்பரவலுக்கான தொடர்பு விடுபட்டு இருப்பதால் எந்த நேரத்திலும் தொற்று பரவலாம் என்பதால் சுகாதாரத்துறை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நியூசவுத்வேல்ஸ் சுகாதாரத்துறை தெவிரித்துள்ளது. தடுப்பூசி போடும் நடவடிக்கையிலும் அரசு தீவிர அக்கறை காட்டி வருவதாக கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3yg4ms2