Breaking News

ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்தன் எதிரொலி – எல்லையை திறக்கும் முடிவை ஒத்திவைத்தது நியூசிலாந்து : தள்ளிப்போகும் ஆஸ்திரேலியர்களின் பயணம்

நியூசிலாந்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எல்லைகளை திறக்கம் முடிவை அந்நாடு ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்து வருவதன் காரணமாக ஒரு மாத காலத்திற்கு எல்லையை திறக்க தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. இது குறித்து நியூசிலாந்து சுகாதார அமைச்சர் Chris Hipkins, பிரதமர் Jacinda Ardern உள்ளிட்டோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Echoes of increased Omicron infection - Postponement of border opening decision New Zealand, Australian trip postponedஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு அரசின் இந்த முடிவு ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்றும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களை குடும்பத்தினருடன் கொண்டாட காத்திருந்தவர்களுக்கு அதிருப்தி அளித்திருக்கும் என்றும் கோவிட் 19 பொறுப்பு அமைச்சர் Chris Hipkins கூறியுள்ளார். 120 விமான சேவைகள் ரத்து செய்திருப்பதன் மூலம் 27 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், தற்போது எல்லைகளை திறந்தால் ஒமைக்ரான் தொற்றின் பாதிப்பு பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அதனால் அரசின் இந்த முடிவு சரியானதே என்றும் Chris Hipkins தெரிவித்துள்ளார்.

அதி வேகமாக பரவக்கூடிய ஒமைக்ரான் வைரசை எதிர்த்து போரிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அதே நேரத்தில் நியூசிலாந்தில் தற்போது 82 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பூஸ்டர் தடுப்பூசிக்கு தயாராக இருப்பதாகவும் Chris Hipkins குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 16 முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் எல்லைகளை திறப்பது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், தனிமைப்படுத்துதல் அல்லாத ஆஸ்திரலிய பயணிகள் இந்த காலகட்டத்தில் நியூசிலாந்து வருகை தரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதற்கான எந்தவித முயற்சிகளை நியூசிலாந்து மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3EgYYqn