Breaking News

ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதன் எதிரொலி : ஆன்டிஜென் பரிசோதனை அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படமாட்டாது என பிரதமர் ஸ்காட் மோரிசன் திட்டவட்டம்

டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனை அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட மாட்டாது என்றும், இது பரிசோதனை கருவியே அன்றி வைரஸ் பாதிப்புக்கான மருந்து அல்ல என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் விளக்கமளித்துள்ளார்.

Echoes of growing omicron vulnerability in Australia. Prime Minister Scott Morrison plans to make antigen testing free of charge..84 மில்லியன் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் ஆஸ்திரேலிய அரசால் ஆர்டர் செய்யப்பட்டுள்ள நிலையில் PCR பரிசோதனைக்காக செல்லும்போது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், எனவே அனைவருக்கும் இலவசமாக ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்தன. இதனை எடுத்து பேசியுள்ள பிரதமர் ஸ்காட் மோரிசன், கோவிட் போன்ற மோசமான சூழலிலும் பல நூறு கோடி ரூபாயை அரசு முதலீடு செய்து வருவதாகவும் ஆனால் அதே நேரத்தில் மருந்துகளைப் போல பரிசோதனை கருவிகளையும் இலவசமாக வழங்குவது என்பது சாத்தியம் இல்லை என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.

பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் இலவசமாக வழங்கப் படுவதாகவும் ஆர்டர் செய்தால் அதை வீட்டிற்கு அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பெற்று காலத்தில் அனைத்தையும் இலவசமாக வழங்குவது என்பது எதிர்பார்ப்புக்கு ஒவ்வாதது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், பிசிஆர் பரிசோதனைகளை குறைத்து ராபிட் ஆன்டிஜன் பரிசோதனைகளை அதிகப்படுத்துவதற்கான உரிய திட்டமிடல் எதையும் அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்று எதிர்கட்சியான லேபர் கட்சி தலைவர் Anthony Albany’s குற்றம் சாட்டியுள்ளார்.

Echoes of growing omicron vulnerability in Australia. Prime Minister Scott Morrison plans to make antigen testing free of charge,இந்நிலையில், விக்டோரியா மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் 5 பிசிஆர் பரிசோதனைகளில் ஒருவருக்கு கட்டாயம் பாசிட்டிவ் என்ற நிலை உருவாகியுள்ளது. திங்களன்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 577 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்து விட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், அறிகுறிகள் தென்பட்டால் மக்கள் உடனடியாக பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு பாசிட்டிவ் ஆகும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு சென்று விடுவதாகவும் இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே ஆன்டிஜன் பரிசோதனைகள் மேற் கொள்வதற்கான திட்டத்தை மேற்கொண்டு வருவதாகவும் விக்டோரிய சுகாதாரத்துறை அமைச்சர்
Martin Foley கூறியுள்ளார்.

இதனிடையே தெற்கு ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் மேற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக தொற்று பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், அங்குள்ள சூழலை பொறுத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அந்த மாகாணத்தின் ப்ரீமியர்கள் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3pR93X7