Breaking News

பிரான்சுடனான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் எதிரொலி : பாதிப்புக்கு உள்ளாகும் ஆஸ்திரேலியர்கள் கவலை

Echoes of cancellation of submarine deal with France. Affected Australian worried

அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான பிரான்ஸ் உடனான ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா திடீரென ரத்து செய்த விவகாரம் பல்வேறு தளங்களில் எதிரொலித்து வருகிறது.

Echoes of cancellation of submarine deal with France. Affected Australian worried.இது தொடர்பாக பிரான்ஸ் தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி உள்ள நிலையில் ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் ஆஸ்திரேலியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும், தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து இருப்பதாக அஞ்சுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் காரணமாக 600க்கும் அதிகமான உள்ளூர் விலைகள் பறிபோகும் என்று கூறப்படுகிறது.

நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் தொடங்கப்பட்ட போது பிரான்சின் Cherbourg நகரில், அதன் வடிவமைப்புக் குழுவில் பணியாற்றி வரும் 33 ஆஸ்திரேலிய பணியாளர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கும் என அச்சம் தெரிவித்துள்ளனர். தூதர் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில் ராஜ்ஜிய ரீதியாலான எந்தவொரு தகவல் பறிமாற்றமும் இல்லாமல் போகும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

மிகவும் மகிழ்ச்சியோடு இந்த திட்டத்தில் பணியாற்றி வந்ததாகவும், ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவு தங்களுக்கு ஏமாற்றத்தையும், கவலையையும் அளிப்பதாகவும் பாதுகாப்புத்துறை தங்களை பத்திரமாக நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் வடிவமைத்து குழுவில் பணியாற்றி வரும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Echoes of cancellation of submarine deal with France. Affected Australian worried,.மேலும் பிரான்சில் பணியாற்றிவரும் ஆஸ்திரேலியர்கள் வேலை இழப்பதற்கான அபாயம் இருப்பதாகவும் அவர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இன்றி அவர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், இந்த பாதிப்புகளை அரசு எவ்வாறு சரி செய்யப் போகிறது எனத் தெரியவில்லை என்று மற்றொரு ஆஸ்திரேலியர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற இக்கட்டான நிலையில் ஆஸ்திரேலியர்களின் நலனில் அக்கறை கொண்டு அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். Cherbourg நகர மேயருடன் ஆஸ்திரேலிய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அங்கு பணியாற்றி வரும் அனைவருக்குமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Link Source: shorturl.at/wCJP4