Breaking News

பிரபல சாக்லெட் தயாரிப்பு நிறுவனத்தின் மீதான தொடர் புகார்கள் எதிரொலி : அனைத்து தயாரிப்புகளையும் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தயாரிப்பு திறுவனத்துக்கு கோரிக்கை

பிரபல சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான கிண்டர் தயாரிக்கும் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் அம்சங்கள் அதிகமாக இருப்பதாகவும் எனவே அந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்து பொருட்களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உணவு பாதுகாப்பு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

பல்வேறு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் விற்கப்படும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஆன்லைன் மூலமாக நடைபெறும் விற்பனை களும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

கிண்டர் நிறுவனத்தின் குறிப்பிட்ட பொருட்கள் அனைத்திலும் நுண்ணுயிர் மாசுபாட்டின் அளவு அதிகமாக இருப்பதாகவும் இவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிட்ட தயாரிப்பு தேதிகள் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

Echo of the series of complaints against the famous chocolate manufacturer request to the product company to recall all productsஅதுமட்டுமல்லாமல், பெல்ஜியத்தில் செயல்பட்டு வரும் பெரேரோ குழுத்தின் சாக்லேட் தொற்சாலையை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து, பெரேரோ குழுமம் கிண்டர் சப்ரைஸ் சாக்லேட்டை மார்க்கெட்டுகளில் விற்பனையில் இருந்து அனைத்தும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேசமயம், விற்பனை செய்யப்படும் கிண்டர் சப்ரைஸ் சாக்லேட்டில் குடற்காய்ச்சல் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் பெரேரோ குழும நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தின் உணவுப் பொருட்களை வாங்கி உண்ண வேண்டாம் என்றும், இது நோய் தாக்குதலை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் மொத்தமாக வாங்கப்பட்டு இருக்கும் பொருட்களை குறிப்பிட்ட நிறுவனத்திடம் திரும்ப அளிக்குமாறும் ஆஸ்திரேலிய உணவு பாதுகாப்பு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

நுண்ணுயிர் மாசுபாடு கொண்ட சாக்லேட் உட்கொண்ட பின்னர் 6 மணி நேரத்தில் அதற்கான அறிகுறிகள் தென்படும் என்றும் குறைந்தபட்சம் ஏழு நாட்கள் உடலில் இந்த பாதிப்புகள் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, பசி இன்மை உள்ளிட்ட அறிகுறிகள் அதிகம் தென்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனை அடுத்து குறிப்பிட்ட கிண்டர் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு அதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப் பொருட்களின் அளவு மற்றும் நுண்ணுயிர் மாசுபாட்டின் பாதிப்பு குறித்த விரிவான விவரங்களை உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. அதனை பின்பற்றி பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3uxTl5E