Breaking News

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வைரஸ் பாதித்த 30 வயது பெண் உயிரிழந்ததன் எதிரொலி : இளம் வயதினருக்கு டெல்டா வகை வைரஸ் அதிகமாக பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை

Echo of the death of a 30-year-old woman infected with the virus in Sydney, Australia, warning that teenagers are at high risk of spreading the delta virus.

சிட்னியைச் சேர்ந்த பெண் ஒருவர் வைரஸ் பாதிப்பு ராயல் பிரின்ஸ் ஆல்பிரட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோன்று சவுத் வெஸ்ட் சிட்னியை சேர்ந்த 70 வயதான பெண் ஒருவரும் வைரஸ் பாதிப்பு காரணமாக Campbelltown மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Echo of the death of a 30-year-old woman infected with the virus in Sydney, Australia, warning that teenagers are at high risk of spreading the delta virusநியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தற்போது கொரோனா காரணமாக டெல்டா வகை வைரஸ் பாதித்த 8 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் முன்னதாக வைரஸ் பாதிப்பு வயதானவர்களை குறிவைத்த நிலையில், புதிய வகை வைரஸ் இளம் வயதினரை அதிகம் தாக்கி வருவதாகவும் இந்த வேகம் மிகவும் அச்சமூட்டும் வகையில் இருப்பதாகவும் நோபல் பரிசு பெற்ற தொற்றுநோயியல் ஆராய்ச்சியாளர் Peter Doherty கூறியுள்ளார். 30 வயதான இளம்பெண் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முந்தைய திரிபு வைரஸ்களை விட டெல்டா வகை வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும் இளம் வயதினர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் Peter Doherty கேட்டுக்கொண்டுள்ளார். இளம் வயதினர் தங்களை வைரஸ் தாக்காது என்று நம்பிக்கையோடு இருக்கும் நிலையில் இது ஆளையே கொல்லும் என்ற நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா வகை வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமான நோயாக மாறி வருவதாகவும் இது வயதானவர்களை மட்டுமே தாக்கும் என்ற எண்ணம் இருந்தால் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் Gladys Berejiklian கூறியுள்ளார். உயிர் இழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் ப்ரீமியர் கூறியுள்ளார்.

Echo of the death of a 30-year-old woman infected with the virus in Sydney, Australia, warning that teenagers are at high risk of spreading the delta virus,ஞாயிறு அன்று ஒரே நாளில் புதிதாக 141 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 24 பேருக்கு சமூக பரவல் மூலமாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் மேலும் சிலருக்கு ஏற்கனவே தொற்று பாதித்தவர்கள் உடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆக கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வைரஸ் பாதித்தவர்களில் இளம் வயதினர் 43 பேர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு இதயம் நுரையீரல் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Link Source: https://ab.co/3BG3dvL