Breaking News

நியூ சவுத் வேல்ஸ் புதிய ப்ரீமியராக Dominic Perrottet தேர்வு : மாகாணத்தின் முதல் இளம் வயது ப்ரீமியராக பொறுப்பேற்கும் பெருமையை பெறுகிறார்.

Dominic Perrottet selected as New South Wales' new Premier

நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியராக இருந்த Gladys Berejiklian பதவி விலகியதை தொடர்ந்து, அடுத்த ப்ரீமியருக்கான போட்டியில் லிபரல் கட்சி சார்பில் கருவூல காப்பாளராக இருந்த Dominic Perrottet உள்ளிட்ட பலர் டிக்கெட் பெற்றனர்.

இந்நிலையில், கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற வாக்கெடுப்பில் திட்டத்துறை அமைச்சர் Rob Stokes -ஐ விட கூடுதல் வாக்குகள் பெற்று Dominic Perrottet புதிய ப்ரீமியராக தேர்வாகி உள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 39 வயதில் ப்ரீமியர் ஆகும் பெருமையை Dominic Perrottet பெற்றுள்ளார். மேலும் 46வது ப்ரீமியராக பொறுப்பேற்றுள்ள Dominic Perrottet, லிபரல் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராகவும், நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது தனக்கு பெருமை அளிப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Dominic Perrottet selected as New South Wales' new Premier.இதே போன்று Western சிட்னியின் அமைச்சரான Stuart Ayres லிபரல் கட்சியின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னுடைய உண்மையான ஆதரவை என்றும் Dominic Perrottet க்கு அளிப்பேன் என்றும், மாகாணத்தின் அற்புதமான ப்ரீமியராக அவர் இருப்பார் என்றும் எதிர்த்து போட்டியிட்ட திட்டத்துறை அமைச்சர் Rob Stokes கூறியுள்ளார். Dominic Perrottet 2017 ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கருவூல காப்பாளராகவும், லிபரல் கட்சியின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முந்தைய நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் Gladys Berejiklian மீதான நிதி முறைகேடு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இது தொடர்பாக ஊழல் கண்காணிப்பு ஆணையமான ICAC விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர் பதவி விலகியதை தொடர்ந்து புதிய பெயருக்கான தேர்வு நடைபெற்றது.

Link Source: https://bit.ly/3oQRGpB