NT எனப்படும் Northern Territory பகுதியில் முதற்கட்டமாக உள்நாட்டு பயணிகளை வீடுகளிலேயே தனிமைப்படுத்தும் திட்டத்தை முதலமைச்சர் Michael Gunner தொடங்கி வைத்தார். அதே நேரத்தில் பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும், அவர்கள் வசிக்கும் பகுதியில் 80% தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கோவிட் ஹாட்ஸ்பாட் பகுதிகளிலிருந்து வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் நபர்களை கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்த வரும் நபர்களுக்கு 2500 டாலர் கண்காணிப்பு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மற்ற மாகாணங்களில் இருந்து வரக்கூடிய நபர்களுக்கு அரசின் உள்ளூர் பகுதிகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் அந்த பகுதிகளில் 80% தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
டார்வின் பகுதியில் தற்போது வரை 73 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாகவும் நவம்பர் 23-ஆம் தேதிக்குள் 80% தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் வடக்கு பிரதேச முதலமைச்சர் Michael Gunner கூறியுள்ளார். Alice Springs , Palmerston பகுதிகளில் முறையே எழுபத்தி ஏழு மற்றும் 76 சதவீதம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் முதலமைச்சர் வெளியிட்டார். அதில் தனிமைப்படுத்திக் கொள்வோர் 48 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என வந்திருக்க வேண்டும் என்றும், தனிமைப்படுத்திக் கொள்ளும் நாட்களில் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Good To Go App ஆப் மூலமாக அவர்களது உடல்நிலை குறித்த தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் காவல்துறையினர் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 100 நபர்களுக்கு இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இது வெற்றியடையும் பட்சத்தில் இதையே சர்வதேச பயணிகளுக்கும் பின்பற்ற திட்டமிட்டிருப்பதாகவும் வடக்கு பிரதேச அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Link Source: https://ab.co/3BgtSOl