Breaking News

தடுப்பூசியில் ஏற்பட்ட குளறுபடி -மன்னிப்புக்கேட்ட சுகாதார அதிகாரி !

Doctor gave vaccine overdose health officer Apologize

இரண்டு வயதானவர்களுக்கு COVID-19 தடுப்பூசியின் சரியான அளவை விட, நான்கு மடங்கு கொடுத்த மருத்துவர் தடுப்பூசி போடுவதற்கு பயிற்சி பெறவில்லை என்று Health Minister Greg Hunt கூறினார்.
பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, சம்பந்தப்பட்ட மருத்துவர் தடுப்பூசி செலுத்த பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளதாக முதலில் கூறியதற்கு மன்னிப்பு கேட்பதாக Greg Hunt தெரிவித்தார்.

health greg huntஆஸ்திரேலிய உடல்நலம் நிறுவனத்தை சேர்ந்த துணை தலைமை மருத்துவ அதிகாரி Michael Kidd-ன் ஆலோசனையின் படி Covid 19 தடுப்பூசி போடும் பணிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் படி அந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும் தடுப்பூசி பயிற்சி முடித்துள்ளதாகவும், இந்த மருத்துவர் மட்டும் அப்பயிற்சி முடிக்கவில்லை என்றும் உடல்நலம் நிறுவனம் கூறியுள்ளது.

இது தொடர்பாக அவர்களிடமிருந்து ஒரு அறிக்கையை இன்று எதிர்பார்க்கிறோம். மேலும் இந்நிறுவனம் மற்றும் அந்த மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

பிரிஸ்பன் Holy Spirit Nursing Homeல் உள்ள இரண்டு நோயாளிகளான 88 வயதான ஒரு ஆணும், 94 வயதான பெண்ணும் மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை எந்த எதிர்மறை விளைவுகளும் இல்லை. முன்னர் மருத்துவர் ஏற்றுக் கொள்ளமுடியாத தவறை செய்துள்ளார் என்று Hunt கூறினார்.

Pfizer தடுப்பூசியை அதிகளவு செலுத்திய பயிற்சி பெறாத மருத்துவரை தற்காலிக சுகாதார அமைச்சர் Mark Butler கடுமையாக சாடியுள்ளார். ஏற்கனவே இம்மாதிரியான ஒழுங்கற்ற நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியரும் தடுப்பூசி செலுத்த சரியான பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசாங்கம் இதைவிட நன்றாக செய்திருக்க வேண்டும் என்றார்.

முன்னதாக குயின்ஸ்லாந்தின் மாநில முதல்வர் Annastacia Palaszczuk மற்றும் St Vincent’s Care Service CEO Lincoln Hopperரும், தடுப்பூசி செலுத்தும் மருத்துவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.

இது குறித்து Hopper கூறுகையில், இந்த தவறு கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். நேற்று எங்களுக்கும், இங்கு குடியிருப்போருக்கும் மிகவும் வருத்தமாக இருந்தது. வயதான பராமரிப்பு இல்லத்தில் தடுப்பூசி திட்டம் இன்றும் தொடர்கிறது.

தடுப்பூசியை ஏற்கவோ அல்லது மறுக்கவோ அவர்களுக்கு உரிமை உள்ளது என்றார்.
Annastacia Palaszczuk கூறுகையில், இந்த சம்பவம் காலை நடந்ததாகவும், மருந்து அதிகப்படி இருந்ததை பற்றி மட்டுமே நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை மட்டும் கண்டுபிடிப்பது அரசின் வேலை இல்லை. இதற்கான விரிவான அறிக்கையை தர வேண்டும். இதற்காக அமைச்சரவை கூட்டத்தை விரைவாக கூட்டுமாறு பிரதமரிடம் கேட்க உள்ளதாகவும், இந்த தடுப்பூசி மீது மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றார்.

நான்கு முறை வெவ்வேறு அளவில் Pfizer தடுப்பூசி சோதனை செய்யப்பட்டது. அதில் எந்தவித பக்க விளைவுகளும் அதிகளவில் இல்லை. அமைச்சர் கூறியதைபோல இதை மாதிரியான நிகழ்வுகள் ஆரம்ப காலத்தில் German மற்றும் UK-வில் உள்ள குடியிருப்பு வயதான பராமரிப்பு பகுதியில் முன்பு இருந்தது. வயதானவர்களுக்கு குறைவான பக்கவிளைவு இருந்ததால் எங்களுக்கு நிம்மதியும் நம்பிக்கையும் ஏற்பட்டது என்று முதன்மை மருத்துவ அலுவலர் Paul Kelly கூறினார்.

Queensland திங்களன்று தடுப்பூசி திட்டத்தை தொடங்க உள்ளது. இந்த வார இறுதிக்குள் 1000 மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாத ஆரம்பத்திற்குள் முன்கள பணியாளர்கள், ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் , வயதானோர் குடியிருப்போர் என 125,000 மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை அரசு நோக்கமாக கொண்டுள்ளது.