Breaking News

பிரிந்துள்ள புலம்பெயர் தமிழ் குடும்பம் விரைவில் இணைய உள்ளது : பெர்த் மருத்துவமனையில் சந்திக்க தற்காலிக பிரதமர் அனுமதி

பிரியா – நடேஸ் தம்பதியின் 4 வயது மகள் தாருணிகா ரத்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களது தடுப்புக்காவல் விவகாரம் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. அந்த வகையில் புகலிட கோரிக்கையை முன்வைக்கும் தமிழ் குடும்பத்தை தொடர்ந்து இங்கிலாந்திலேயே குடியேற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கையாக முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பெர்த் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி தாருணிகாவுடன் அவரது தாய் பிரியா மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தை நடேசலிங்கம் மற்றும் மூத்த மகள் கோபிகா ஆகியோர் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறுமியின் குடும்பம் சந்திப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரியா நடேஸ் குடும்பத்தின் குடியேற்ற வழக்கறிஞர் அரசுக்கு வைத்த கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய துணை பிரதமர் Michael McCormack மற்றும் குடியேற்ற துறை அமைச்சர் Alex Hawke ஆகியோர் கிறிஸ்துமஸ் தீவில் இருந்து நடேசலிங்கம் மற்றும் சிறுமி கோபிகா ஆகியோர் விடுவிக்கப்பட்டு மருத்துவமனையில் பிரியா மற்றும் தாருணிகா சந்திக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து செவ்வாயன்று கான்பெராவிலிருந்து அவர்கள் பெர்த் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அரசின் தனி விமானத்தில் அல்லது வேறு வர்த்தக விமானத்திலோ பெர்த் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Divorced Diaspora Tamil family on internet soon, Interim PM allowed to visit Perth hospital.ஆஸ்திரேலியா சுகாதாரத்துறை உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் இது போன்ற இக்கட்டான நிலையில் அவர்களின் குடும்பம் ஒன்றிணைந்து இருப்பது அவசியமாகிறது என்று குறிப்பிட்டிருந்தது. இது கருணை அடிப்படையிலான கோரிக்கை மட்டுமல்ல மருத்துவரீதியாக பெற்றோர்கள் உடனிருப்பது சிறுமியின் உடல் நலத்திற்கும் தேவையானது என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிறுமிக்கு ஏற்பட்டுள்ள தீவிர ரத்த தொற்றுக்கு மேலும் 8 வார காலம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் ப்ரியா நடேஷ் குடும்பத்தை குயின்ஸ்லாந்தின் பிலோலா தீவில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நேரத்தில் அரசின் கொள்கை முடிவுகளின் அடிப்படையிலும், மருத்துவத்துறையின் ஆலோசனைகளையும் கேட்டு செயல்பட வேண்டியது அவசியமானது என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.

Link Source: https://bit.ly/3pVnR5p